ஆண்கள் அழுவதை தவிர்ப்பது ஏன்னு தெரியுமா? உளவியல் காரணம் இது தானாம்!
பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஆண்கள் அவ்வாறு அழுவது கிடையாது. அவர்கள் அழுவதவதை கடினமான சூழ்நிலைகளிலும் கூட பெரும்பாலும் தவிர்த்த்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ஆண்கள் அழுவதற்கு ஏன் அஞ்சிகின்றார்கள் அவர்கள் அழுவது தவறான விடயமா? ஆண்கள் அழுவதை ஏன் தவிர்கின்றார்கள் எப்பதற்காக உளவியல் காரணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆண்கள் அழுவதை ஏன் தவிர்கின்றார்கள்?
ஆண்கள் குடும்ப பின்னணியில் இருந்தே அதனை கற்றுக்கொள்கின்றார்கள். சிறு வயதில் பெண் பிள்ளளைகள் அழுதால். சமாதாபனப்படுத்தும் பெற்றோர், ஆண் பிள்ளைகள் அழும் போது ஆண்பிள்ளளைகள் ஒருபோதும் அழக்கூடாது என்ற எண்ணக்கவை அவர்கள் மனதில் ஆழமாக பதியச்செய்து விடுகின்றார்கள்.
அதனால் வளரும் போது ஆண்கள் கவலை ஏற்படும் போது கூட அழுவதை அவமானமாக நினைக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள்.
ஆண்கள் அழுவது கோழைத்தனம் என்பது போன்ற ஒரு புனைவு சமூகத்தில் இருப்பதால், ஆண்களின் உளவியலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அழுவது தவறு என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
இதனால்தான், அவர்கள் சிறு வயதில் இருந்தே அழுகையை அடக்கிகொள்ள பழகிவிடுகின்றார்கள்.ஆண்களின் மனநிலையில் அழுகை என்பது முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு உணர்வாக பார்க்கப்படுகின்றது.
அழுவதால் தனது நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட பலர் தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயமும் ஆண்கள் உளவியல் ரீதியில் ஆண்கள் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த சமூகம், ஆண்கள் மீது ஒரு சில அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக ஆண்கள் என்றால் உணர்ச்சிகளை அடக்கியவனாக, பலமுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பை ஆண்கள் மீது திணிக்கின்றமையால் ஆண்கள் தங்களின் சாதாரண உணர்வான கவலையை அழுகை மூலம் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அழுகை என்பது, உணர்ச்சி மிகையால் வரும் வெளிப்பாடு தானே தவிர அழுவதால் ஆண் வலிமை இழக்கின்றான் என்பது முற்றிலும் கட்டுக்கதை. அவ்வாறான கட்டுக்தைளின் உளவியல் தாக்கத்தால் தான் ஆண்கள் யார் எதிரிலும் அழுவதே இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |