சாஸ்த்திரம்: திருமணமான பெண்கள் ஏன் வெள்ளியில் மெட்டி போடுகிறார்கள் தெரியுமா?
பொதுவாக திருமணமான பின்னர் புகுந்த வீட்டிற்கு நுழையும் போது கால் வீரல்களில் மெட்டி அணிவார்கள்.
திருமணத்தில் மெட்டி போடுவது சிலர் சடங்காகவே வைத்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் போடும் மெட்டி வெள்ளியில் இருக்க வேண்டும் என சாஸ்த்திரம் கூறுகின்றது.
அப்படியாயின் திருமணமான பின்னர் ஏன் பெண்கள் மற்றும் ஆண்கள் மெட்டி அணிகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும்.
இதன்படி, பெண்கள் வெள்ளியில் மெட்டி அணிவதற்கு சாஸ்த்திரத்தை தாண்டி ஒரு சில அறிவியல் காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அந்த வகையில் பெண்கள் வெள்ளியில் மெட்டி அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நரம்புகளின் இணைப்பு
பெண்களின் கால் வீரல்களில் இருக்கும் நரம்பு அவர்களின் கருப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கால் விரல்களில் வெள்ளி மெட்டி அணியும் போது அந்த நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் கருப்பைக்கு நல்ல பலனை கொடுக்கின்றது.
2. குழந்தைப்பேறு
கால் விரல்களில் இருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெண்களின் மாதவிடாய் சீராக நடக்கும். அத்துடன் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகமாகும்.
3. இரத்த ஓட்டம் மேம்படும்
திருமணமான பெண்கள் தன்னுடைய கட்டை விரலில் வெள்ளியில் மெட்டி அணிந்திருப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராக இயங்கும். அத்துடன் பெண்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
4. எண்ணற்ற உடல் நல நன்மைகள் கிடைக்கும்.
பெண்கள் வெள்ளியில் மெட்டி அணிவதால் அவர்களின் கால் விரல்கள் அழகு பெறுகின்றன. அத்துடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன.
5. பெரிய மெட்டி வேண்டாம்.
திருமணத்திற்குப் பிறகு சிலர் பெரிய அளவிலான மெட்டிகளை வாங்கி அணிவார்கள். இது சில சமயங்களில் அவர்களின் கால்களை காயப்படுத்தலாம். எப்போதும் விரல்களுக்கேற்ப மெட்டி அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |