ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் ஏன் இருக்கிறது தெரியுமா?
ஜீன்ஸ் பேண்ட்களில் நீங்கள் சிறிய பாக்கெட் ஒன்று இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இந்த பாக்கெட்கள் ஏன் இருக்கின்றன? இதனால் என்ன பயன்? ஏன் இந்த பாக்கெட்களை இவ்வாறு டிசைன் செய்தனர் என பெரும்பாலானோருக்கு தெரியாது.
இந்தபதிவில் நாம் அதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
இந்த பாக்கெட் மாதிரிக்கு பின்னால் ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இந்த ஜீன்ஸ் பேண்ட்கள் பெரும்பாலும் சுரங்களில் பணியாற்றுபவர்களுக்காக டிசைன் செய்யப்பட்டது மிக அழுத்தமான துணியில் ஆடை ஆணிவது தான் அவர்களுக்கு நல்லது என்பதால் இந்த ஜீன்ஸ் பேண்டை அவர்களுக்காக தயாரித்தனர்.
பாக்கெட் கடிகாரம்
அந்த காலங்களில் பாக்கெட் கடிகாரம், மிகவும் பிரபலம் மக்கள் பாக்கெட் கடிகாரங்களை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
அவர்களுக்கு எப்பொழுது எல்லாம் மணி பார்க்க வேண்டுமோ அதை எடுத்து பார்த்து கொள்வார்கள்.
அது சுரங்க பணியாளர்கள் கட்டாயம் வைத்திருப்பார்கள் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுக்க வேண்டும் அதற்காக அவர்கள் அப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள்.
அவர்கள் வைத்திருக்கும் கை கடிகாரத்தை பத்திரமாக வைத்திருக்கவே இந்த பாக்கெட் வடிவமைக்கப்பட்டது. படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது.
ஜீன்ஸ் பேண்ட்டில் இந்த பாக்கெட் வைக்கும் ஐடியாவை கொடுத்தது ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பாளரான லிவி ஸ்டாரஸ் இவரது கம்பெனி பிராண்ட் தான் தற்போதும் Levi's என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
வாட்ச் பாக்கெட்
தற்போது இந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிபவர்கள் இந்த பாக்கெட்டை காயின்ஸ் மற்றும் டிக்கெட்களைபத்திரமாக வைத்திருக்க பயன்படுத்துகிறார்கள்.
அதற்காகவே அதற்கு டிக்கெட் பாக்கெட் என பெயர் வந்துவிட்டது இந்த பேண்ட் தயாரிக்கப்படும் போது இதற்கு பெயர் வாட்ச் பாக்கெட் தான்
இரும்பாலான பட்டன்கள்
பொதுவாக ஜீன்ஸ் பேண்ட்டின் மற்றொரு அடையாளம் அதன் இரும்பு பட்டன்கள். இந்த இரும்பு பட்டன்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
இதுவும் சுரங்க தொழலாளர்களை மனதில் வைத்து தயாரித்தது தான். பொதுவாக சுரங்க தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வார்கள்.
அடிக்கடி குனிந்து நிமிர்ந்து பணியாற்றுவார்கள் அதனால் சாதா பட்டன்கள் தாங்காது. அதற்காக நீண்டகாலம் உழைக்க வேண்டும்என இரும்பாலான பட்டன்கள் பொருத்தப்பட்டன.
நினைவில் கொள்ளுங்கள்
ஜீன்ஸ் பேண்ட்டிற்கு பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்கும் என் நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டீர்கள் தானே? இப்பொழுது உங்களுக்கு புரிந்துவிட்டாதா ஜீன்ஸ் பேண்ட் வரலாறு அடுத்த முறை நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் வாங்க செல்லும் போது இந்த வரலாறு தானாக உங்கள் நினைவிற்கு வரும் குறிப்பாக அந்த பாக்கெட்டை பார்க்கும் போது அது வாட்ச் பாக்கெட் என்பது புரியும்.