நாய் எதுக்கு இன்னொரு நாயோட Buttsயை மோப்பம் பிடிக்குதுன்னு தெரியுமா?
பொதுவாகவே நாய்கள் ஒன்றையொன்று சந்திக்கும் போது புட்டங்களை (Butts)முகர்ந்து பார்க்கின்றன.
இது உங்களுக்கு அருவருப்பாகவோ அல்லது சங்கடமாகவோ தோன்றலாம், ஆனால் அவை ஏன் இவ்வாறு செய்கின்றன என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
புட்டங்களை (Butts)முகர்ந்து பார்ப்பது நாய்களின் ஆரோக்கியமான, இயல்பான நடத்தையாக இருக்கின்றது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாயின் வாசனை உணர்வு ஒரு நாயின் ஆல்ஃபாக்டரி அமைப்பு மிகவும் வித்தியாசமானது. அதன் வாசனை உணர்வு மனிதனை விட மிக உயர்ந்ததாக இருக்கும்.
மனிதர்களின் மூக்கில் சுமார் 5 மில்லியன் ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் மாத்திரமே உள்ளன ஆனால் நாய்கள் சுமார் 220 மில்லியன்களைக் கொண்டுள்ளன.
மனிதர்களால் முகர்ந்த பார்க்க முடியாத பல விடயங்களை நாய்கள் பல அடுக்குகளில் பிரித்து அறியக்கூடிய ஆற்றல் கொண்டது.
மனிதர்களுக்கு அப்படி ஒரு மூக்கு இருந்தால் மனிதர்களும் எல்லாவற்றையும் முகர்ந்து பார்க்க விரும்புவார்கள் என அறிவியல் ஆய்வு கூறுகின்றது.
நாய்கள் ஏன் புட்டங்களை மோப்பம் பிடிக்கின்றன?
நாய்கள் மத்தியில் பட் மோப்பம் பிடித்தல் என்பது ஒரு வகை வாழ்த்து என்று பலரும் நினைக்கிறார்கள், ஆனால் அது பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றது.
மோப்பம் பிடித்தல் மூலம், நாய்கள் ஒன்றையொன்று பற்றிய பல விவரங்களை அறிய முடிகிறது. ஒவ்வொரு விலங்குக்கும் அதன் தனித்துவமான வாசனை உள்ளது, அதில் மனிதர்கள், நாய்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகள் அடங்கும்.
ஆனால் நாய்கள் ஏன் புட்டங்களை மோப்பம் பிடிக்கின்றது என கேட்டால் இன்னொரு நாய் தொடர்பில் அதன் விபரங்களை அறிவதற்காகவே இவ்வாறு செய்கின்றது.
நாய்கள் இன்னொரு நாயை சந்திக்கும் போது இதன் பின் புறத்தை முகரும் போது ஒரு ஹார்மோன் சுரக்கின்றது இதில் அந்த நாயின் வயது முதல் அதன் பெற்றோர் குறித்த விடயங்கள் மற்றும் அதன் இனம் போன்ற பல்வேறு விடயங்களை இன்னொரு நாயால் அறிய முடியுமாம்.
குறிப்பாக இது தற்போது என்ன மனநிலையில் இருக்கின்றது அதனால் தற்போது இனப்பொருக்கம் செய்ய முடியுமா போன்ற விடயங்களை அறிவதற்காகவே நாய்கள் இவ்வாறு மோப்பம் பிடிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |