2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: குதூகலிக்கும் ராசிக்காரர்கள் - இனி ஜாக்பாட் தான்!
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், ஏழரை சனி பாடாய் படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து கவலையோடு இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் இனி வருடமாக அமையும்.
இது போல் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு டிசம்பர் முடிந்து ஜனவரி பிறக்கும் போது நல்ல நேரம் ஆரம்பிக்கப்படுகின்றது.
மேலும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் இனி அவர்களின் தொழிலும் நல்ல வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
இதன்படி, இன்றைய நாள் தொட்டு தொட்ட காரியங்களில் சுபம் கொண்டு வரும் ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம்.
1. மேஷம்
ராகு பகவான் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இதனால் வீட்டை திடீர் அதிஷ்டங்கள் தேடி வரும். ஆறாம் வீட்டில் உள்ள கேதுவும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.
அத்துடன் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி பண வரவு அதிகமாகும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம்.
2. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எந்த வேலை செய்தாலும் இது குறித்து அதிகப்படியான கவனம் தேவை. ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர்.
ராகு பகவான் வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். இதனால் இந்த மாதம் முதல் உங்களுக்கான ஜாக்பாட் நிச்சயம்.
3. துலாம்
ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். இதனால் விபரீத ராஜயோகம் கிடைக்கும். பணத்தை அள்ளிக்கொடுத்தாலும் யாருக்கும் நீங்கள் கடன் கொடுக்க வேண்டாம்.
எதிர்பாராத வகையில் வருமானம் வரும். நல்ல வேலையும் பதவி உயர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |