இந்த பிரச்சனை இருக்கா? தவறி கூட ஒருபோதும் கீரை சாப்பிடாதீங்க
கீரைகளில் ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் கீரைகளை உணவில் சேர்த்து பயன்படுத்துவது இல்லை.
ஆனால் முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்ற பல கிரைகளில் பல சத்தக்கள் இருக்கின்றது. கீரையில் உள்ள சத்துக்கள் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
இருந்தாலும் கீரையை சிலர் சாப்பிட கூடாது. கீரை ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதன் நுகர்வு சிலருக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் யார் யார் கீரையை சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கீரை சாப்பிட யார்? சாப்பிட கூடாது
யூரிக் அமில அளவு ஏற்கனவே அதிகமாக உள்ளவர்கள் கீரையை மிகக் குறைந்த அளவில் உணவி்ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் காரணம் கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை உண்டாக்க கூடும்.
இதன் காரணமாக குறைவாக சாப்பிடலாம் அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. யூரிக் அமிலம் கீரை சாப்பிடுவதால் அதிகரிக்கும். இதனால் உடலில் மூட்டு வலிகள் அதிகமாகும்.
யூரிக் அமிலம் என்றால் என்ன?
யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். பியூரின்கள் எனப்படும் ரசாயனங்களை உடல் செயலாக்கி உடைக்கும்போது இது உற்பத்தி செய்யப்படுகிறது.
யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்கள் வழியாகச் சென்று, சிறுநீரில் கலந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. யூரிக் அமிலம் உடலில் இருந்தால், அதன் செறிவு ஹைப்பர்யூரிசிமியா எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.
இது ஆண் பெண் என்ற இரு பாலருக்கும் வரும். இதை அதிகமாக மாற்றுவது நமது உணவுப்பழக்க வழக்கம் தான்.
யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்கள் ப்யூரின்கள் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், சிவப்பு இறைச்சிகள், சில கடல் உணவுகள், ஆல்கஹால், முக்கியமாக கீரைவகைகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |