இணையத்தை தெறிக்கவிட்ட அழகி! யார் இந்த நீமா போல்?
ஆபிரிக்க நாடான தன்சானியாவை சேர்ந்த கிலி போல் மற்றும் நீமா போல் ஆகிய இருவரும் இந்தியாவில் கொண்டாடப்படும் நட்சத்திரங்களாக மாற்றம் பெற்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் இந்த இருவரும் இந்திய பாடல்களுக்கு வசனங்களுக்கு உதட்டு அசைவு செய்தல் (lip-syncing) மற்றும் நடனமாடுதல் ஆகியன மூலம் சமூக ஊடகங்களில் மிகப் பிரபல்யம் பெற்றுள்ளனர்.
யார் இந்த நீமா போல்?
தன்சானியாவின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கிலி போலின் சகோதரியே இந்த நீமா போல் ஆவார்.
இன்ஸ்டாகிராமில் பல்வேறு காணொளிகளை வெளியிட்டு இந்திய ரசிகர்கள் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்துக் கொண்டவராக நீமாபோல் திகழ்கின்றார்.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் ஐந்தரை லட்சம் பின்தொடர்வாளர்கள் இருக்கின்றார்கள்.
அண்மையில் வெளியான பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு உதட்டு அசைவு செய்து இவர் அசத்தி வருகின்றார்.
பாலிவுட்டின் முதன்மை நட்சத்திரங்கள் பலர் இந்த நீமா போலிற்க்கு ரசிகர்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நீமா போல் மற்றும் கிலி போல் ஆகியோர் பற்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார் என்பதன் மூலம் இவர்களின் செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும்.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் பாடல்களுக்கு உதட்ட அசைவு செய்தமையும் தேசிய கீதத்திற்கு உதட்டு அசைவு செய்த அமையும் பாரத பிரதமர் வியந்து பாராட்டியுள்ளார்.
இதே வேலை இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு கிலி போல் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
கிலி மற்றும் நீமா போல் ஆகியோருக்கு ஏற்கனவே பாலிவுட்டின் கலைப் படைப்புக்களில் பங்களிப்பு வழங்குமாறு அழைப்புகள் கிடைக்கப்பட்டுள்ளன.