எலிமினேஷனில் திடீர் மாற்றம்- வெளியேறும் பிரபலம் இவரா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வார முடிவில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறும் பிரபலம் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது. வழமையாக பிக்பாஸ் ஆரம்பித்தவுடன் பல பிரபலங்கள் விமர்சனங்கள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் இப்போது நடிகை மாயா கிருஷ்ணனும் பிக்பாஸ் ரிவ்யூ கொடுத்து வருகிறார்.
இதுவரையில் இல்லாத வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இரண்டு குழுவினராக பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசன்களில் ஆண், பெண் என அனைத்து பிரபலங்களும் சமம் என்கிற ரீதியில் தான் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படுவார்கள்.
இருந்த போதிலும், கடந்த சீசனில் ஆண் போட்டியாளரான பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண் போட்டியாளர்களில் மாயா, பூர்ணிமா உட்பட ஒரு சிலர் புகார் செய்த காரணத்தினால் இந்த சீசனில் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனில், நடிகர் ரஞ்சித், மேடை பேச்சாளர் முத்துகுமரன், தொகுப்பாளர் ஜாக்குலின், சௌந்தர்யா, தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த 6 போட்டியாளர்களில் அருண் பிரசாத் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் ப்ரீ பாஸை வென்றதால் அவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பி உள்ளார்.
இந்த நாமினேஷனில் கம்மியான ஓட்டு வாங்கிய அருண் பிரசாத் தப்பியதால் இந்த வாரம் 5 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தபடியாக குறைவான வாக்குகளை ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருந்தது. அதிலும் ரவீந்தர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |