இளம் நடிகருடன் திருமணத்தை மீறிய உறவா? தனுஷ் தான் காரணமாம்! பரபரப்பை கிளப்பிய செய்தி
விஜய்யேசுதாஸின் மனைவிக்கு இளம் நடிகருடன் தொடர்பு இருப்பதாகவும், அதன் பின்னணியில் நடிகர் தனுஷ் காரணமாக இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
காதல் திருமணம்
தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடி பிரபல்யமடைந்தவர் பாடகர் விஜய் யேசுதாஸ்.
இவர் கடந்த 2007 ஆம் தன்னுடைய நீண்டநாள் நண்பரான தர்சனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிள்ளைகளின் படிப்பிற்காக சென்னையில் வீடு எடுத்து குடியேறினார் விஜய் யேசுதாஸ்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தர்சனாவின் 60 பவுன் நகைகள் காணாமல் போனதாக பொலிசில் புகார் அளித்தார்.
லாக்கரில் நகைகள் இருந்ததாகவும், லாக்கரின் ரகசிய இலக்கம் விஜய் ஜேசுதாஸ் மற்றும் தனக்கு மட்டுமே தெரியும் என தெரிவித்திருந்தார்.
அப்படியாயின் நகையை யார் எடுத்திருப்பார் என்ற சந்தேகத்தில் இவர்களின் வாழ்க்கை குறித்து பொலிஸார் விசாரணை செய்ய தொடங்கினர்
இந்த நிலையில், வீட்டிலுள்ள வேலையாட்களை விசாரித்து பார்த்த போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
அதில், வேலையில்லா பட்டதாரி வில்லன் அமிர்தாஸ் பிரதானுக்கும் தர்சனாவிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாம்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார் விஜய் ஜேசுதாஸ், இந்நேரத்தில் நடிகர் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது.
எனவே தங்களது விடயம் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்ற நோக்குடன் தான், நகை திருட்டு என்ற நாடகத்தை துவங்கியுள்ளார்கள் என பேசப்படுகிறது.
இதற்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதும் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.