டைட்டில் வின்னர் தகுதி இவருக்கு இருக்கு.. ரவீந்தர் பதிவால் ஷாக்கான இணையவாசிகள்
“பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆவதற்கான தகுதி இவருக்கு இருக்கு..” என பெண் போட்டியாளரின் பெயரை குறிப்பிட்டு ரவீந்தர் போட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 55 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இடையில் வைல்ட் கார்ட் என்றியில் சென்ற 4 போட்டியாளர்களில் பிரஜன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டள்ளார். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆனாலும் ஒருக்கட்டத்திற்கு மேல் பிரபலங்கள் போட்டியை புரிந்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
கடந்த எட்டு சீசன்கள் போன்று அல்லாமல் இதுவரையில் பிக்பாஸ் சீசன் 9-ல் விளையாடும் போட்டியாளர்கள் தங்களின் விளையாட்டை காட்டவில்லை. மற்றவர்களுக்காக உள்ளே வந்தவர்கள் போன்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களின் வாதங்கள் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. அத்துடன், காதல் ஜோடிகளின் சண்டைகளும், லீலைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறுவர்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகவே மாற்றி விட்டது.
ரவீந்தர் போட்ட பதிவால் அதிர்ச்சி

விஜய் சேதுபதி மற்றும் பிக்பாஸ் பல தடவைகள் வார்னிங் கொடுத்தும் திருந்தாத கம்ருதீன்- பார்வதி இருவரும் மைக் இல்லாமல் பேசி, வீட்டிலுள்ளவர்களின் உணவு பொருட்களை எடுக்கும் அளவுக்கு விளையாடி விட்டனர்.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தாறுமாறாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், விமர்சகரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் போட்ட பதிவு இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் இதுவரையில் யாரும் டைட்டில் வின்னர் ஆவதற்கான தகுதிக்கு வரவில்லை என பேச்சு அடிப்பட்டு வருகிறது.
My predictions
— Ravindhar Chandrasekaran (@fatmanravi) December 7, 2025
Winner - Parvathy
Runner - Vikram
2Nd runner-Vinoth
4th and 5th Vijay tv product
From now Vijay tv + VJS + Vikram Versus VJ Paru (atrocity queen)
This time title is for women aftr Rithvik &Archana out of 8 season only 2 women winners#BigBosstamilseason9
இவர் இடையில் பார்வதி டைட்டில் வின்னர் ஆவார் என பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இதனை மற்ற சமூக வலைத்தள விமர்சகர்கள் எடுத்து போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இப்படியே சென்றால் பிக்பாஸ் சீசன் 9-ன் டைட்டில் வின்னர் யார் என்றே கடைசி வரையில் கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகி விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |