'சரிகமப' நிகழ்ச்சியின் இலங்கையை சேர்ந்த இந்திரஜித்துக்கு உதவிய ஈழத்து இளம் வர்த்தகர்.........
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த இந்திரஜித்துக்கு ஈழத்து இளம் வர்த்தகரான சுதன் உதவி செய்துள்ளார்.
இந்திரஜித்
இலங்கையின் பதுளையை சேர்ந்த இந்திரஜித்துக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வர்த்தகர் சுதன் என்பவர் உதவி செய்துள்ளார்.
இதன்போது இந்திரஜித் போட்டியில் கலந்து கொள்ள போகும் சமயத்தில் அவருக்கான முழு ஆடை செலவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த வர்த்தகர் இதற்கு முன்னர் சரிகமப போட்டியில் கலந்து கொண்ட ஈழத்து போட்டியாளர் கில்மிசாவிற்கும் மலையகத்தை சேர்ந்த அசாணிக்கும் பிரபல தொழிலதிபரான தியாகியுடன் சேர்ந்து உதவி செய்துள்ளார்.
இந்திரஜித் மிகவும் வறுமையிலும் தன் திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு உள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு சென்று அங்கிருந்த உணவகம் ஒன்றில் வேலை செய்து பின்னர் அங்கிருந்த கழிவறையிலும் பேருந்து தரிப்பிடத்திலும் தன் நேரத்தை கழித்ததன் பின்பே சரிகமப பாடல் தெரிவுப்போட்டியில் தெரிவும் செய்யப்பட்டிருந்தார்.
இவ்வளவு சிரமத்தை தாண்டியும் ஒரு இளைஞன் தனக்கான அடையாளத்தை தேடி செல்கிறான் என்றால் அது சாதனை படைப்பதற்கான முதல் படியாகும்.
இதன்போது இவருக்கு உதவி செய்த ஈழத்து இளம் வர்தகர் சுதனுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
இதை தவிர தமிழகத்தில் இருக்கும் சட்டதரணி மற்றும் பேச்சாளருமான சுமதி இந்திரஜித் தங்கி பாடுவதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு உதவி செய்துள்ளார்.
இவர் இந்திரஜித் உட்பட நான்கு போட்டியாளருக்கு உதவி செய்துள்ளர். தற்போது இந்திரஜித் சரிகமப போட்டியில் கலந்துகொண்டு தனது பாடலால் ரசிகர்களை கவர்ந்து வாழ்த்துக்களையும்பெற்று வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |