யாரெல்லாம் யானை முடி மோதிரம் அணியலாம் தெரியுமா?
பொதுவாக நாம் அனைவரும் யானை முடியில் மோதிரம் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை அறிந்திருப்போம்.
இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது யானை முடியில் ஆபரணங்கள் செய்து அணிவது பழக்கமாகி வருகின்றது. பலரும் கையில் பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள்.
யானை முடியை தங்கம் ,வெள்ளி. ஐம்பொன் போன்ற அணிகலன்களில் செய்து மோதிரமாக அணிந்து வந்தால் பலன்கள் இரட்டிபாக கிடைக்கும் என நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் நவக்கிரகங்களின் குரு பகவானுடைய வாகனமாக யானை பார்க்கப்படுகின்றது. அதில் தங்கம் சேர்த்தால் அது குருவிற்கு உகந்த பொருளாக மாறுகின்றது.
அந்த வகையில், பல்வேறு சிறப்புக்களை தன்வசம் வைத்திருக்கும் யானை முடி மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்? அப்படி என்னென்ன சிறப்புக்கள் உள்ளன? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
யானை முடி மோதிரத்தின் சிறப்புகள்
மறைமுகமாக நம்மை சில எதிர்மறையான ஆற்றல்கள் சூழ்ந்திருக்கின்றன. இதனை நகர்த்தெறியும் ஆற்றல் இந்த யானை முடி மோதிரத்திற்கு உள்ளது.
அதிலும் குறிப்பாக மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகளை தடுக்கக் கூடியது. நடக்கக்கூடிய கெட்டவைகளை முன்கூட்டியே நமக்கு தெரியப்படுத்தும். இதன் காரணமாக இளைஞர்கள் பலர் யானை முடியில் ஆபரணங்கள் செய்து அணிகிறார்கள்.
மேலும் யானையின் பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பயந்த சுபாபம் உள்ளவர்கள் யானை முடியில் ஆபரணங்கள் அணிவதால் அவர்களுக்கு தைரியம் கிடைக்கும் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து விடும்.
யாரெல்லாம் அணியலாம்?
யானை முடி மோதிரம் அனைவரும் அணியலாம். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை பிறந்தவர்கள் மற்றும் ஆங்கிலத் தேதியில் 3, 21, 11 ,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அணிவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |