உங்களது Facebook கணக்கை யார் பின் தொடர வேண்டும்?
மெட்டா நிறுவனத்தின் முக்கியமான சமூக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் அல்லது பேஸ்புக்கானது பல மில்லியன் கணக்கான மக்களுடன் தொடர்புகளை பேண உதவுகின்றது.
இந்த சமூக வலையமைப்பு, பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ்வாறான அம்சங்களில் ஒன்றாக Facebook Follow அல்லது பின் தொடர்வதற்கான அம்சம் என குறிப்பிடப்படும் ஒரு அம்சத்தை பற்றி நாம் இன்று பார்க்க போகின்றோம்.
இந்த Facebook Follow அம்சமானது ஏதாவது ஒரு முகநூல் கணக்கில் ஃபாலோ பண்ணுவதற்கு அல்லது பின் தொடர்வதற்கு ஏதுவாக அமைகின்றது.
Facebook Follow அம்சம் என்றால் என்ன?
நீங்கள் ஒருவரை பின்தொடரும்போது அவர்களுடைய பதிவுகள் உங்கள் நியூஸ் ஃபீடில் பார்க்க முடிகின்றது.
நீங்கள் நட்பாக இருக்கும் நபர்களை தன்னிச்சையாகவே நீங்கள் பின் தொடர்கின்றீர்கள்.
நீங்கள் விரும்பும் துறைகளை சேர்ந்த நபர்களுடைய கணக்குகளையும் நீங்கள் பின் தொடர முடியும்.
உங்களது நட்பு வட்டாரத்தில் இல்லாத ஒருவர் உங்களுடைய பதிவுகளை தன்னுடைய நியூஸ் பீடில் பார்க்க அனுமதிக்க முடியும்.
எவ்வாறு முகாமைத்துவம் செய்வது?
Profile Picture கிளிக் செய்யவும்(முகநூல் பக்கத்தில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் இந்த படத்தை கிளிக் செய்யவும்)
Settings and Privacy என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இடது பக்கம் காணப்படும் Public posts என்பதனை தேர்வு செய்யவும்
நண்பர்கள் அல்லது பப்ளிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ள முடியும்.
யார் உங்களை பின்தொடர்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு
உங்களது ப்ரோபைல் பிரைவசி செட்டிங்கில் Public என குறிப்பிட்டு இருந்தால் உங்களது நண்பர்கள் பட்டியலில் இல்லாத உங்களை பின் தொடரும் அனைவரிடது பெயர் பட்டியல்களையும் பார்வையிட முடியும்.
இதனை பார்வையிடுவதற்கு ப்ரொபைல் பகுதிக்கு சென்று More என்பதை கிளிக் செய்து ஃபாலோவர்ஸ் என்பதை கிளிக் செய்வதன் மூலம் இதனை பார்வையிட முடியும்.