இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா?
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாக திகழ்கின்றது.
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது போல், எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எண்களால் ஒருவரை வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் முடியும். அது போல் பாதாளத்தில் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் நம்புகின்றது.
அந்த வகையில் எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்ககளின் விதி எண் 2 ஆகும். இந்த எண்களில் பிறந்தவர்களின் விசேட குணங்கள், எதிர்கால வாழ்க்கை மற்றும் எதிர்மறை குணங்கள் என்பன தொடர்பில் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறப்பு குணங்கள்
2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே வசீகர தோற்றமும், காந்த பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மதனதளவிலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீத புத்திக்கூர்மை இவர்களின் சார்த்தியமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும்.
இவர்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய துறைகளில் எளிமையாக வெற்றியடைவார்கள். புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்களின் புத்திகூர்மையால் இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களை விடவும் சமூகத்தில் அதிக மதிப்பையும் மரியாதையையும் பெற்றுக்கொள்வார்கள்.
இவர்கள் எந்த சூழ்நிலைக்கும் தன்னை உடனடியாக மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதிர்மறை குணங்கள்
இவர்கள் விரைவாக முடிவெடுப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். காரணம் இவர்களுக்கு இயல்பாகவே சரியான முடிவெடுக்கும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும்.
ஒரு விடயத்தை தெரிவு செய்வதிலும் இந்த எண்களில்பிறந்தவர்கள் அதிக குழப்பங்களை சந்திக்கின்றனர்.
இவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கின்ற போதிலும், தன்னம்பிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |