தினமும் காலை இதை செய்தாலே நரை முடியை தொல்லையை அடியோடு அழிக்க முடியுமாம்!
இன்றைய காலத்தில் இளம் வயதினர்கள் நரை முடி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். வெள்ளை முடி ஏற்பட்டால், பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
அதை மறைக்க பல கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். அது முடியை இன்னும் சேதப்படுத்துகிறது.
இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
முடி கொட்டுதா? அடர்த்தியா வளர இந்த ஒரு பொருள் போதும்...!
கருமையாக்க வீட்டு வைத்தியம்
முதலில் வெந்தயத்தை இரவில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து, தலையில் தடவி, வந்தால், முடியின் வெண்மை மறையும்.
அடுத்ததாக, 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது, இதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்.
இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயன் அளிக்கிறது. வெந்தயத்தை அரைத்து பொடியை தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும். இதனால் இளமையிலேயே வரும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்.
தேங்காய் எண்ணெய்யுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால், முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் மற்றும் பொடுகும் தொல்லை நீங்கும்.