இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்... யார் யார்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசி பெண்களை திருமணம் செய்வதால் அவர்களின் கணவன்மார்கள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
அப்படி திருமணத்தின் பின்னர் கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் திருமண உறவுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இவர்கள் துணைக்கு மிகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் நிதி ரீதியாக பாரிய வளர்ச்சியடைவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே உணர்ச்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் கணவன் மீது அதிக அக்கறையுடன் நடந்துக்கொள்வார்கள். இவர்களை திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூற வேண்டும்.
கன்னி
இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த அறிவு மற்றும் திறமையை கொண்ட இவர்கள் எப்போதும் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்பவர்கள் வாழ்வில் மிகவும் மன அமைதியுடன் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |