மற்றவர்களிடம் மிருக குணத்தை வெளிப்படுத்தும் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்த்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களிடம் இரக்கமின்றி மிகவும் கடுமையாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக இவர்களுக்கு ஆண்கள் மீது அதிக வெறுப்புணர்வு இருக்கும். அப்படி பொறுமை என்ற நாமமே அறியாது மற்றவர்களிடம் மிருக குணத்தை வெளிப்படுத்தும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால் இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை காரணமின்றி பகைத்துக்கொள்ளும் குணம் சற்று அதிகமாக இருக்கும்.
இவர்களை பொருத்தமட்டில் இவர்கள் செய்வதும், சொல்லுவதும் தான் சரி என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருப்பார்கள். இவர்களின் இந்த குணம் பெரும்பாலும் மற்றவர்களுடன் பகையை உருவாக்கும்.
மேலும் இவர்களிடம் கொஞ்சமும் பொறுமை இருக்காது. எது சரி எது தவறு என்பது குறித்து சிந்தித்து செயல்படும் குணம் பிறப்பிலேயே சற்று குறைவாக தான் இருக்கும். குறிப்பாக இவர்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் இவர்களின் இரக்கமற்ற இயல்புக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
மகரம்

சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி பெண்கள் நீதி நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இருப்பினும் இவர்களின் கட்டுக்கடங்காத கோபம் மற்றும் பெறுமையற்ற செயல்கள் இவர்களின் வாழ்வில் இருக்கும் நல்ல நட்புகளை இழக்க செய்கின்றது. இவர்களின் கோபம் மிகவும் மிருகத்தனமானதாக இருக்கும்.
அவர்களின் ஒழுக்கம் மற்றும் எதார்த்தமான அணுகுமுறையை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் இவர்களின் நிதானமற்ற கோபம் மற்றும் ஆண்கள் மீது இயல்பாகவே இருக்கும் வெறுப்பு போன்றன வாழ்க்கையை சீரியஸாக மாற்றுகின்றது.
விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்களும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் கொண்டவர்கள் என்பதால் இயல்பாகவே போர் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் அதிக உணர்ச்சிவயப்படும் தன்மை இவர்களின் இரக்கமற்ற நடத்தையில் வெளிப்படும். இவர்களால் எந்த விடயத்தையும் பொறுமையாக அணுக முடியாத நிலை காணப்படும்.
விருச்சிக ராசி பெண்கள் தங்கள் தீவிரம் மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் செயல்கள் மற்றவர்களை எளிதில் காயப்படுத்தும் வகையில் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |