2026-ன் கடைசி 3 மாதங்கள்: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!
இன்னும் மூன்று மாதங்களில் 2027 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் சிறப்பானதாக பார்க்கப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் ஏற்படும் கிரக நிலை மாற்றங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படலாம். அதில், அக்டோபர் மாதத்தில் முக்கியமான கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது.தேவர்களின் குருவான குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதேபோல் ராகு-கேதுவும் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளனர். மேலும், கிரகங்களின் நட்சத்திர மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் கொடுக்கும்.
இதன் மூலம் தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி, விரும்பிய வெற்றி, உறவுகளில் நெருக்கம், புதிய வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி, 2026 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது எனபது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
பணியிடத்திலும் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்கினால், எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை காரணமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்தப் பயணங்கள் உங்களுக்கு நல்ல ஆதாயங்களைத் தரக்கூடும்.
சிம்மம்

ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிமையான காலமாக இருக்கும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
குடும்பத்திலும் உங்களின் செல்வாக்கு வழக்கத்தைவிட உயரக்கூடும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தால், அது நிறைவேறும்.
நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்டு, பொறுமையுடன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் சிறப்பான காலமாக அமையும். இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தொழில் அல்லது வணிகம் தொடர்பாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது.
காதலில் இருப்பவர்களின் காதலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், சம்மதமும் கிடைக்கக்கூடும். தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
உறவுகளில் பரஸ்பர நம்பிக்கையும், ஈர்ப்பும் அதிகரிக்கும். முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் இந்த3 மாதங்கள் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |