எந்த ராசியினர் எந்த மாதிரியான ருத்ராசட்ம் அணிந்தால் அதிர்ஷ்டம்?
ருத்ராட்ச்ம் ஒவ்வொரு விசேஷ பலன்களை தரக்கூடிய நிலையில், எந்தெந்த ருத்ராட்சம் எந்த ராசியினர் அணியலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்களில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது. மேலும் இது ஒரு மூலிகை மரமாகவும் கருதப்படுகிறது.
இது அணிவதால் நமக்கு மன மற்றும் உடல் நலம் சீராக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதை ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என அனைவரும் அணிந்து வருகின்றனர்.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகள் முகம் என்று சொல்லப்படும் நிலையில், ஐந்து கோடு என்றால் ஐந்து முகம் என்றும் 6 கோடு இருந்தால் ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு 1 முதல் 21 ருத்ராட்ச முகங்கள் காணப்படும் நிலையில், எந்தெந்த ராசியினர் எதை அணியலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் ஒருமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது சிறந்தது. தைரியம், தன்னம்பிக்கை வெற்றி இவற்றினை தருவதுடன், மூன்று அல்லது ஐந்து முகம் கொண்டவற்றியை அணிவது இன்னும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியினர் ஆறு மற்றும் 14 முகம் கொண்ட ருத்ராசம் அணிவது சிறந்தது. இவை அதிர்ஷ்டம் வெற்றி, செல்வம், ஆரோக்கியம் இவற்றினை அளிக்கின்றது. மேலும் மன அமைதி மற்றுமு ஆரோக்கியத்தியும் மேம்படுத்துகின்றது.

கடகம்
கடக ராசியினர் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது சிறந்தது. வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி, வாழ்க்கை சிறப்பாக இருக்கவும், செல்வம், பதவி, புகழ் ஆகியவற்றினை தருகின்றது. மேலும் அறிவு, ஞானம் இவற்றினை மேம்படுத்துகின்றது.
தனுசு
தனுசு ராசியினர் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது சிறந்தது. இவை மங்களகரமான பலன்களைத் தருவதுடன், தைரியம், தன்னம்பிக்கை வெற்றி ஆகியவற்றையும் அளிக்கின்றது.

மகரம்
மகர ராசியினர் நான்கு, ஆறு, 14 முகம் கொண்ட ருத்ராட்சத்தினை அணிவது சிறந்தது. சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறுவதுடன், இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கின்றது.
மீனம்
ராசிக்காரர்களுக்கு மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு அமைதியான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ உதவுகிறது. இது தொழில், வியாபாரம், கல்வி, திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்க உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |