இந்த ராசியில் பிறந்தவர்களை முதல் தடவை பார்க்கும் போதே பிடிச்சிருமாம்.. மேஜிக் செய்யும் ராசிகள்
ஒருவருக்கு உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்க வேண்டும்.
அப்படி சிலரை பார்த்தவுடன் எந்தவித காரணமும் இல்லாமல் பிடித்து விடும். அதற்கான ஆளுமையும் வசீகரமும் இயல்பிலேயே அவர்களிடம் காணப்படும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் ஆளுமையிலும் வசீகரமான தோற்றத்திலும் சிறந்து விளங்குவார்கள். அப்படியானவர்களை பார்த்தவுடன் எந்தவித காரணமும் இல்லாமல் பிடித்து விடும்.
அந்த வகையில், பார்த்தவுடன் மற்றவர்களை கவரும் ராசியில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பில் வசீகரமாக ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். நம்ப முடியாத அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். முதல் சந்திப்பிலேயே மற்றவர்கள் பிடிக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். உ அத்துடன் இந்த ராசியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் வசீகரம், புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவை உணர்வு எப்போதும் ஒரு கூட்டத்தை இவர்களை சுற்றி வைத்திருக்கும். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வசீகரத்தாலும், கருணையாலும் எதிரில் இருப்பவர்கள் மீது முதல் பார்வையிலேயே கவர்ந்து விடுவார்கள். மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் சமநிலை பேணும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். |
விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாகவும், வெளிபடையாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க முயற்சி செய்வார்கள். நேர்மையானவர்களாக இருப்பதால் சில சமயங்களில் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளலாம். ஆனால் இவரின் தோற்றம் பிரச்சினையிலிருந்து காத்துக் கொள்ளும். எனவே அவர்களை ஒருமுறை சந்தித்தவர்கள் கூட நீண்ட காலம் அவர்களை நினைவில் வைத்திருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).