இந்த ராசியினர் வலியை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வார்களாம்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் துன்பங்களையும் வலிகளையும் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளாமல், தங்களுக்குள்ளேயே மறைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி வாழ்வில் எவ்வளவு கடிகமான சூழ்நிலையையும் தாங்கிக்கொண்டு சிறிய புன்னகையுடன் கடந்து செல்லும் வலிமையான மனம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே ரகரியங்களை காப்பதற்கும்,மர்மமாக குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இந்த ராசியினர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாருடனும் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் காரணமாக இவர்கள் அனுபவிக்கும் எந்த துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.
சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை உணர்ந்து சகித்துக்கொண்டு வாழும் மனப்பக்குவம் இவர்களிடம் பிறப்பிலேயே இருக்கும்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் பொறுப்பில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பதால், துன்பங்களை பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள்.
எந்த பிரச்சினைக்கும் உணர்வு ரீதியாக அல்லாமல் எப்போதும் ஒரு புத்திசாலித்தனமான தீர்வை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.
ஆனால் அந்த மெருகூட்டப்பட்ட வெளிப்புறத்திற்குப் பின்னால் ரகசிய சுமைகளைச் சுமக்கக்கூடிய ஒரு இதயத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது பலருக்கும் தெரியாது.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் நேர்த்தியையும் முழுமையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனிதர்களில் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை பழகாமலேயே கண்டறியும் திறமை அவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்களின் இந்த ஆற்றல் காரணமாக யாரிடமும் எதையும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.
தங்களின் துன்பத்தை பார்த்து மற்றவர்கள் ஆறுதல் சொல்வது போல் நடித்தாலும், உண்மையில் யாரும் ஆறுதலாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் இவர்களிடம் வலுவாக இருப்பதால், தங்களின் வலிகளை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        