இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்... உங்க ராசி என்ன?
மனிதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் இருப்பதை போன்று, அவரவருக்கு என தனித்துவமான குணங்கள் மற்றும் விருப்பு வெறுப்பு, நம்பிக்கைகளும் இருப்பது இயல்பு.
ஜோதிட சாஸ்தித்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதை போல் தனிப்பட்ட நம்பிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், இளம் வயதிலேயே ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம் அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பிறப்பிலேயே இறை பக்தி அதிகம் கொண்டவர்களாகவும், ஆன்மீக வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் ஆன்மீகப் பண்புகளில் சில இலட்சியவாதம், நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பல்வேறு வகையான தத்துவங்களைப் படிப்பதையும் விவாதிப்பதையும் ரசிக்கிறார்கள்.
அவர்கள் மாற்றத்தையும் புதுமையையும் ரசிக்கிறார்கள் என்றாலும், இது அவர்களை ஆழமாகச் செல்ல முனைவதால் அவர்களை ஆழமற்றவர்களாக மாற்றாது, இவர்கள் ஆன்மீக வாழ்க்கை மீது தீவிர தேடல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிகம் ஆன்மீக சுற்றுலா பயணிகளாக அறியப்படுகின்றார்கள். அதை பற்றி அதிகம் தேடவும், ஆன்மீக எண்ணங்களை வளர்க்கவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆன்மீக விடயங்களில் ஆர்வம் கொண்டு உலகியல் வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கும் செல்லும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.
இவர்கள் எப்போதும் தங்களை சந்தேகிக்காமல், தங்கள் சொந்த உள்ளுணர்வை நம்பி அதன்படி செயல்படுவார்கள். தங்கள் சுய விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை காரணமாக பயமின்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், பிரபஞ்சத்தின் சக்தியை அதிகம் நம்புவார்கள். அதே சமயம் நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் ஆன்மீக குணம் ஆழ்ந்து கவனித்து வாழ்க்கையில் செயல்படுத்துவது ஆகும். இவர்கள் ஆன்மீகத்தை அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் பயன்படுத்துவார்கள். ஆன்மீகம் மூலம் கிடைக்கும் அமைதியையில் மகிழ்சியடையும் குணம் நிச்சயம் இவர்களிடம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |