இந்த ராசியினர் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவர்களிடம் இந்த விடயத்தில் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களின் எண்ணங்களும், சிந்திக்கும் விதமும் மிகவும் மோசமானதாகவும் சில சமயம் ஆபத்தானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் ஆழமான உணச்சிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் எளிதில் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். இவர்கள் மர்மம் நிறைந்த நபர்களாக இருப்பாரை்கள்.
இவர்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் புறக்கணிப்புக்களையும் மனதில் வடுவாக மாற்றிக்கொண்டு பழிவாதங்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். உறவுகளிடம் மிகவும் உண்மையாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு நிகழ்ந்த துரோக்துக்கு தக்க பதிலடி கொடுத்தே தீருவார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால்,இவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்ள்.
இலக்குகளின் மீது தீவிர கவனம் செலுத்தும் இவர்களின் பாதையில் யாரும் வீணாக குறுக்கிட்டால் இவர்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும்.
இவர்கள் தங்களின் லச்சியத்தை அழிக்க நினைக்கும் நபர்களிம் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்.
மிதுனம்
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் புத்திகூர்மைக்கும் அறிவாற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணங்களையும் தேவைகளையும் வெளிப்படையாக சொல்ல விரும்பமாட்டார்கள்.
நெருங்கிய உறவுகளிடம் கூட ரகசியம் காக்கும் குணம் மற்றும் இரட்டை இயல்பு என்பன இவர்களிடம் இருக்கும். இவர்களின் இந்த குணம் சில சமயம் இவர்களை ஆபத்தானவர்களாக மாற்றுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |