2026ல் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை செம ஜோரா இருக்குமாம் ... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசியானது வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், ஒருவடைய ராசி நட்சத்திரமானது அவர்களின் காதல், திருமணம், தொழில், திறமைகள், பொருளாதாரம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும்.

ஜோதிட கணிப்புக்களின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை அமோகமமாக இருக்கப்போகின்றது. இந்த அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினருக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் காதல் வாழ்க்கையில் மிகப்பெரும் மகிழ்ச்சிகரமாக திருப்பங்கள் ஏற்படப்போகின்றது.
இவர்கள் அடிப்படையில் மிகவும் உணர்சச்சிவசப்படக்கூடியவர்களாகவும், மற்றவர்கள் மீது எளிதில் பாசம் வைப்பார்கள். அவர்களால் யாருடைய பிரிவையும் தாங்கிக்கொள்ளவே முடியாது.
மற்றவர்கள் மீது அளவு கடந்த அன்பும், அக்கறையும் வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள். இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள்.
பழைய விடயங்களை அடிக்கடி மீட்டி பார்க்கும் குணம் கொண்ட இவர்கள் முன்னாள் துணை பற்றிய அழகிய நினைவுகளையும் அடிக்கடி நினைத்து கவலைப்படுவார்கள். ஆனால் 2026ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலி/காதலனுடன் இணைந்து மகிழ்சியாக காதல் வாழ்க்கைகைய அனுபவிக்கும் யோகம் காணப்படுகின்றது.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களுக்கான தங்களின் சந்தோசத்தையும், விருப்பங்களையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் வாழ்க்கை மிகுந்ம வலி கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
இவர்கள் முன்னாள் காதல் உறவை அவ்வளவு எளிதில் இவர்கள் மறக்க மாட்டார்கள். இவர்கள் காதலை முறிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் வெறுப்பவர்களாக இருப்பார்கள்.
2026ஆம் ஆண்டு ராசி பலன் கணிப்பின் பிரகாரம் துலாம் ராசியினர் முன்னாள் காதலி/காதலனுடன் இணைவார்கள்கள் என குறிப்பிடப்படுகின்றது.
ரிஷபம்

புதன் கிரகத்தால் ஆளுப்படும் ரிஷப ராசியினருக்கு இயல்பாகவே காதல் மற்றும் திருமண வாழ்க்கையின் மீது அதிக ஈடுபாடு காணப்படும்.
இவர்களால் அவ்வளவு எளிதாக காதல் முறிவுகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது பழைய நினைவுகளை மறக்கவும் முடியாது. மற்றவர்களின் முன்னிலையில் வலிமையாக இருந்தாலும் தனிமையில் அன்புக்காக ஏங்கும் மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
தனது முன்னாள் காதலி, காதலனுடன் தொடர்பில் இருக்க விரும்புவார்கள். ஒருவேளை காதல் முறிவு ஏற்பட்டால், இதனால் மன வேதனை அடைவார்கள்.இவர்களின் கடந்த கால காதல் வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் 2026 ஆம் ஆண்டில் முடிவு கிடைகப்போகின்றது. இவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |