யாருக்கும் அடங்காத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளனர்.
அதன்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத, சுதந்திரமான ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களில் ஆண்கள் சாகச, சுதந்திரத்திற்கான தீரா தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் மனக்கிளர்ச்சியானது உறவுகள் மற்றும் தொழில் ஆகிய இரண்டிலும் வழிநடத்தும் விருப்பத்தால் சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாகவும், இயற்கையாகவே தங்களை இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் சுதந்திர விருப்பத்தை தூண்டுவது கலகலப்பான உரையாடல்களும், அதில் பலதரப்பட்ட அனுபவங்களில் ஈடுபடுவதும் தான். ஆனால் இவர்கள் யாருக்கும் கட்டுப்படாதவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உலகை ஆராய்வதற்கும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆழ்ந்த விருப்பத்தால் உந்தப்படுவார்கள்.
இவர்களின் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பாக இருக்கும். இவர்கள் எப்போதும் தங்களின் சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை.
மகரம்
மகர ராசியினர் எப்போதும் சுதந்திரமாக நடந்து கொள்ள விரும்புகின்றார்கள். தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.
சொந்தமாக முடிவெடுக்கும் இவர்களின் முடிவை யாராலும் எளிதில் மாற்ற முடியாது. இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றார்கள்.
விருச்சிகம்
பொதுவாக விருச்சிக ராசியினரின் மனதை யாராலும் இலகுவில் புரிந்துக்கொள்ள முடியாது. இவர்கள் எப்போதும் சுயமாக முடிவெடுப்பவர்களாகவும் இரசியங்களை காப்பாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்ப மாட்டார்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்.
துலாம்
ராசியினரின் இயல்பு மிகவும் எளிமையானது, அவர்கள் வெளியில் இருந்து பார்க்க மிகவும் மென்மையாகவும், எளிமையாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது.யாருக்கும் கட்டுபட்டு வாழக்கூடாது என்ற மனநிலை இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |