இந்த ராசியிருக்கு நல்ல நட்பு ஒருபோதும் கிடைக்காதாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே நமது வாழ்க்கையில் காதல் எவ்வளவு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றதோ, அதைவிட நட்பும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
ஒருவர் தனது தாய் தந்தையிடமும், வாழ்க்கை துணையிடமும் கூட சொல்லவே முடியாத விடயங்களையும் நண்பனிடம் பகிந்துக்கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட ஒரு நட்பு அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியடையாதது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் ஒரு உண்மையாக நட்பு கிடைப்பது பெரும் பேராட்டமாக இருக்குமாம்.
அப்படி வாழ்க்கை முழுதுவம் ஒரு நல்ல நட்புக்காக ஏங்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பிறப்பிலேயே மர்மமாக இயல்புக்கும், ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாரிடடும் பகிர்ந்துக்கொள்ள விரும்புவது கிடையாது.
இவர்களின் இந்த தனித்துவ குணம் காரணமாக இவர்களுக்கு நெருக்கமாகும் நபர்கள் மிகவும் குறைவானவர்பளாகவே இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் நெருக்கத்தை தவிர்ப்பதே நல்ல நட்பு கிடைக்காததற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்களாகவும், இலட்சிய வாதிகளாகவும் இருப்பதால், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் எப்போதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
குறிப்பாக தொழில் நிமிர்த்தம் யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப கூடாது என்பது குறித்து எப்போதும் தெளிவாக இருப்பார்கள்.
இவர்களின் முழு கவனமும் தங்களின் இலக்கின் மீது இருப்பதால், இவர்கள் வாழ்வில் ஒரு நல்ல நட்பு கிடைப்பது பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், வாழ்வில் எதற்காகவும் தங்களின் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ விரும்புகிறார்கள், மேலும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இணங்கி வாழ ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
இவர்ளின் இந்த குணங்கள் இவர்கள் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதில் ஒரு தடையாகவே இருக்கும். இவர்கள் சொல்லவதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற குணமும் இவர்களுக்கு நல்ல நட்பு அமையாமைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |