பிறப்பிலேயே சைகோ குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்ககை மற்றும் ஆளுமையில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே சைகோ தனமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனநோயாளி அல்லது சைக்கோ என்றதும் பலரும் கொலை செய்பவர்கள் என்று தவறாக புரிந்துக்கொள்ள கூடும். ஆனால் அப்படி அர்த்தமல்ல.
இவர்களின் மனநிலை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். உறவுகளை கையாளும் பக்குவம் இவர்களிடம் மிகக் குறைவாகவே காணப்படும்.
இவர்கள் சிந்திக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் ஆனால் அது குறித்து அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்படிப்பட்ட சைகோ குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் இலக்கை நிர்ணயம் செய்துவிட்டால் வெறிப்பிடித்தவர்கள் போல் தீவிரமாக அதனை அடைய முயற்சிப்பார்கள்.
அவர்கள் தங்களின் உண்மையான உணர்வுகளை மறைக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும், அவர்களின் இலக்குகளை அடைய சைக்கோ போல் செயற்படுவார்கள். அதன் போது உறவுகளின் உணர்வுகள் பற்றிய சிந்தனையே இவர்களுக்கு இருக்காது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு திறன் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த திறன் காரணமாக இவர்களுக்கு மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைப்பது கடினமாக இருக்கலாம்.இவர்களின் மனநிலை ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
அதனால் உறவுகளிடம் இவர்கள் அதிகமாக கேபப்படுவார்கள். கோபத்தில் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் வார்த்தைகளையும் கொட்டிவிடுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மற்றும் உறுதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு இயல்பிலேயே தலைமைத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் அனைத்தும் இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இது சில சமயங்களில் இவர்களை இரக்கமில்லாமல் சைக்கோ தனமாக நடந்துக்கொள்ள வழிவகுக்கும். தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நோக்கில் உறவுகளிடம் மிகவும் கடினமாக நடந்துக்கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |