கோபத்தில் மிருகத்துக்கே டஃப் கொடுக்கும் டாப் 3 ராசிகள்! இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும்.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிகம் கோபம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இவர்களின் கோபம் எதிரில் இருப்பவர் யார்? என்ன உறவு? எவ்வளவு அதிகாரம் மிக்க பதவியில் இருக்கின்றார் என்பதையெல்லாம் பார்க்காது.
அப்படி கோபத்தில் மிருகத்தையே மிஞ்சுவிடும் அளவுக்கு வெறித்தனமான ஆற்றல் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் லட்சிய ராசியான மேஷம், அதன் உக்கிரமான கோபத்திற்குப் பெயர் பெற்றது. இவர்களிடம் நேரயாக மோதுவது மிகவும் ஆபத்தான விளைவுளை ஏற்படுத்தும்.
குறிப்பாக இந்த ராசி ஆண்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பது சிறப்பு. காரணம் இவர்களின் கோபம் வெறிப்பிடித்த சிங்கத்தை போல் கட்டுப்படுத்தவே முடியாததாக இருக்கும்.
அவர்களை கோபப்படுத்தும்போது, இந்த நெருப்பு ராசியினர் நிலைமையை நேரடியாக எதிர்கொள்ளத் சற்றும் தயங்க மாட்டார்கள். இவர்கள் கோபத்தின் விளைவு எதிரியை தடம் தெரியாமல் அழிக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக திகழும் சூரிய பகவானால் ஆளப்படும் சி்ம்ம ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் சீண்டப்படுகின்றார்கள் என்பதை அறிந்தால் இவர்களின் ராசி சின்னம் சிங்கத்தை போல் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறிவிடுவார்கள்.
இவர்களுக்கு துரோகம் செய்வதும், தனக்கு தானே சமாதி கட்டுவதும் ஒன்றுதான் இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதானதாகவும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.
விருச்சிகம்

கோபத்தில் ஆபத்தான முடிவெடுக்கும் இயல்புக்கு விருச்சிக ராசியினர் தான் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் தனித்துவமான புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், வார்த்தைகளால் மிகவும் ஆபத்தான ராசிகளில் ஒன்றாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பொதுவாக யாரிடமும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பகிர்ந்துக்கொள்வது கிடையாது.
ஆனால் இவர்களை யாராவது கோபப்படுத்திவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விடயமாக இருக்கும். இவர்களின் கோபத்துக்கு ஆளாவது நாமே நம் வாழ்க்கையை நரகத்தில் தள்ளுவதற்கு சமன்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |