இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்களாம்.. துரோகிகள் என்ன ராசி தெரியுமா?
மனித வாழ்க்கையில் பலர் ஏதாவது ஒரு கட்டத்தில் துரோகத்திற்கு ஆளாகுவார்கள்.
நெருக்கமாக இருப்பவர்களை சரியான நேரம் பார்த்து மாட்டி விடுவது, அவர்கள் பற்றிய ரகசியங்களை வெளியில் கூறுவது போன்ற மோசமான செயல்கள் துரோகிகளாக அடையாளப்படுத்தும்.
கூடவே பழகியவர்கள் ஏன் திடீரென துரோகியாக மாறுகிறார்கள் என பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். அப்படியானவர்களுக்கு ஜோதிடம் உதவி செய்கிறது.
ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் கிரக மாற்றங்கள் காரணமாக துரோகங்கள் செய்கிறார்கள். அவர்களின் சூழல் மற்றும் சுயநலம் துரோகம் செய்ய வைக்கிறது.
அந்த வகையில், என்னென்ன ராசிகளில் பிறந்தவர்கள் துரோகம் செய்வார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
துரோகிகளாக இருக்கும் ராசிகள்
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் முடிவுகளை யோசிக்காமல் எடுப்பதால் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள். உற்சாகம் மற்றும் நிதானம் இருந்தால் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியதில்லை. போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களை இலகுவில் காட்டிக் கொடுத்து விடுவார்கள். |
விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுக்கு தவறிழைக்கப்பட்டதாக உணரும்போது பழிவாங்கும் மனம் உண்டாக வாய்ப்பு உள்ளது. அவர்களின் விசுவாசம் அசைக்க முடியாததாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்கள் அவர்களுக்கு ஏதாவது செய்தால் அதனை திருப்பி செய்து விட வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான நேரங்களில் தான் முதுகில் குத்த தயாராக இருப்பார்கள். |
மிதுனம் | மிதுன ராசிக்காரர்கள் திறமையான தொடர்பாளர்கள் மற்றும் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் நன்றாக பேசுவதால் நினைக்கும் காரியங்களை இலகுவில் செய்து கொள்வார்கள். இலக்குகளை அடைய நெருக்கமானவர்களுக்கு கூட துரோகம் செய்வார்கள். சில சமயங்களில் அவர்களின் இந்த குணம் மோசமானதாக மாறலாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).