ராஜவாழ்கை வாழ்வதற்காகவே பிறப்பெடுத்த ஆண் ராசியினர் இவர்கள் தானாம்.... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே ராஜ வாழ்க்கை வாழ்வதற்கான யோகம் மற்றும் ஆசீர்வாதத்துடன் பிறப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்படி ராஜ யோகத்துடன் பிறப்பொடுத்த ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே ராஜ வம்சத்தினர் போன்ற வசீகர தோற்றத்துடன் காணப்படுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும் சிறிதும் அச்சமின்றியும் இயங்கும் குணம் இவர்களுக்கு அமைந்திருக்கும்.
இயல்பிலேயே அதிக கருணை, விசுவாச குணம் மற்றும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் நிறைந்திருக்கும். தோற்றத்திலும் ராஜா போன்று இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கார ஆண்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயல்பாகவே இவர்களுக்கு மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் என்பன அமைந்திருக்கும்.
ராஜா போன்று கம்பீரமான தோற்றமும் அனைவரையும் வசீகரிக்க கூடிய பார்வையையும் இவர்கள் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.
உலக விடயங்களிலும் அரசியல் விடயங்களிலும் அனைத்தையுட் தெரிந்து வைத்திலுருக்கும் இவர்களுக்கு மற்றவர்களை அடக்கி ஆளும் ஆற்றல் இயற்றையாகவே இருக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதிலும் இருக்கும் இடத்தில் அவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருப்பார்கள்.
இவர்களிடம் பணத்திற்கு குறைவே இருக்காது. சொந்த செலவுக்கும் சரி மற்றவர்களுக்கு வாரி கொடுப்பதிலும் சரி இவர்களை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்பது போல் நடந்துக்கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கை முழுவதும் கம்பீரமாக ராஜ வாழ்க்கை வாழ்வது நிச்சயம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)