இந்த ராசியினர் தான் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடப்பை கொண்டிருகும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்களாம்.
இவர்கள் இன்றி குடும்பத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்கின்ற அளவுக்கு, குடும்பத்தில் முக்கிய இடம் வகிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்களாக இருப்பதால், இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சுய மரியாதைக்கும் தன்னம்பிக்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் நிதி ரீதியில் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். குடும்பத்தை சரியான முதுறையில் வழிநடத்தும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் குடும்பத்தில் எந்த உறுப்பினராக இருந்தாலும் சரி இவரை்களின் கருத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். சிறிய விடயங்கிலும் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.
கன்னி
கிரகங்களின் இளவரசரான அறியப்படும் புதன் பகவானால் ஆளப்படும் கன்னி ராசியினர் இயல்பாகவே பகுப்பாய்வு திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
எந்த விடயத்தையும் எடுத்தவுடன் முடிவு செய்யாது நுணுக்கமாக அவதானித்து, சிந்தித்து தெளிவாக முடினை எடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் குடும்பத்தில் இவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பல மடங்கு உயர்த்துகின்றது.
இவர்களின் புத்திசாலித்தனம் சிக்கலான நிதி விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் குடும்பத்தை சரியான வழியில் கொண்டுசெல்லவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானால் ஆளப்படுவதால் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் இயல்பாகவே லட்சிய வாதிகளாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்காளாக இருப்பார்கள்.
மகர ராசியினர் சிறந்த நிதி முகதமைத்துவ அறிவு படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
இவ்வாறான பொறுப்பு மிக்க குணத்தால் இவர்கள் குடும்பத்தின் ஆணிவேர் போன்று முக்கியத்துவம் பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |