ஷாப்பிங்கிற்கு அடிமைகளாக இருக்கும் ராசியினர்.. உங்க துணையின் ராசி இருக்கா-ன்னு பாருங்க!
பொதுவாக குறிப்பிட்ட சிலர் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பொருள் வாங்குவார்கள்.
அந்த பொருள் சில சமயங்களில் அவர்களுக்கு தேவையில்லாமலும் இருக்கலாம். ஏனெனின் அவர்களால் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் இது போன்று வீண் செலவுகளை அடிக்கடி செய்வார்கள்.
இது போன்ற தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கங்கள் கூட குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிகமாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
தேவையற்ற மற்றும் பயனற்ற விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யும் பழக்கம் இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம்.
அந்த வகையில், ஷாப்பிங் பழக்கத்தால் வாழ்க்கையில் பாரிய சிக்கல்களை சந்திக்கும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ஷாப்பிங் அடிமைகள் பிறந்த ராசிகள்
1. மேஷ ராசியினர்
மற்ற ராசிகளை விட இந்த ராசியில் பிறந்தவர்கள் உற்சாகமானவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஏதாவதுவொரு விடயத்திற்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். வெளியில் செல்லும் பொழுது ஏதாவது ஒரு பொருளை கண்டு விட்டால் உடனே வாங்கி விடுவார்கள். ஷாப்பிங் செய்வதை விளையாட்டுத்தனமாக செய்வார்கள். இவர்கள் சம்பாரிக்கும் பணம் இது போன்று தேவையில்லாத செலவுகளுக்கே சென்று விடும்.
2. சிம்ம ராசியினர்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அரச பதவியில் இருக்க வாய்ப்பு உள்ளது. நேர்த்தியாக இருக்க விரும்பும் இவர்கள் நிறைய பணத்தை செலவு செய்வார்கள். ஆடைகள், ஆபரணங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். விலையுயர்ந்த பிராண்டுகளை விரும்பும் நபர்கள் சிம்ம ராசிக்காரர்களாக இருக்கலாம்.
3. மீன ராசியில் பிறந்தவர்கள்
மீன ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பார்கள். மற்றவர்கள் மீதுள்ள அனுதாபத்தினால் அதிகமாக செலவு செய்வார்கள். காதலிப்பவர்கள் இவர்களை வைத்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவ பணத்தையும் அதிகமாக செலவு செய்வார்கள். ஒரு கற்பனை உலகத்தில் வாழும் இவர்கள் யதார்த்தமான வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். ஷாப்பிங் பழக்கம் இவர்களின் நற்செயல்களையும் தடுக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).