காதலர்களாக இருப்பவர்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
ஏனெனின் இளைஞர்கள் தங்களின் உயிர் போனாலும் எக்காரணம் கொண்டும் தன்னுடைய காதலை யாருக்கவும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
காதலிப்பவர்கள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் காதல் என்பது யாவருக்கும் ஒன்று தான்.
ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுகு்கு காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில், 12 ராசிகளுக்கு காதல் வாழக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
| - மேஷ ராசியில் பிறந்தவர்கள் காதல் பற்றி யோசிக்கும் முன்னர் அவர்களின் வாழ்க்கை குறித்து சிந்திப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றல்களை உருவாக்கும் நபர்களை கண்டால் பணத்தை முதலீடு செய்வது குறித்து ஆலோசனை எடுக்க முனைவீர்கள். இப்படியான பழக்கங்கள் நாளடைவில் காதலாக மாறலாம்.
|
ரிஷபம் ராசி
| - இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிலும் பார்க்க வெட்கப்படும் நபராக இருப்பார்கள். இவர்களிடம் அதிகமான அர்ப்பணிப்பு காணப்படும். ஆரம்பத்தில் இருந்த சந்தேகங்கள் நாட்கள் செல்ல மறைந்து விடும். இதனால் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசினால் சந்தோஷமாக இருக்கும்.
|
மிதுனம் ராசி
| - காதல் என்ற மந்திரம் ஆத்ம துணை என்ற கருத்துடன் தொடர்புடையது என நம்பும் குணம் உங்களிடம் இருக்கும். சில சமயங்களில் இருதரப்பும் இதனை நம்புவார்கள். எப்போதும் உங்கள் துணையுடன் ஆழமான காதலுடன் இருப்பீர்கள். உங்கள் வயிற்றில் எப்போதும் பட்டப்பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
|
கடகம் ராசி
| - காதல் என்றால் என்பதனை நன்கு புரிந்து கொண்ட நபராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரிச் செய்து, உங்கள் துணைக்கும் கற்றுக் கொடுப்பது அவசியம். வாழ்க்கையில் எப்படி சேர்ந்து முன்னேறலாம் என்பதனை இருவரும் சிந்திக்க வேண்டும்.
|
சிம்மம் ராசி
| - நீண்ட தூர உறவின் யோசனையை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் எதை பற்றியும் சிந்திக்காத நபராக இருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் அதனை தீர்த்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பீர்கள்.
|
கன்னி ராசி
| - கன்னி ராசியில் பிறந்தவர்கள் காதலில் ஏற்ற தாழ்வு இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.எதுவாக இருந்தாலும் குடும்பத்துடன் பேசி முடிவெடுக்கும் நபராக இருப்பீர்கள். காதல் மற்றும் கூட்டாண்மை எல்லாவற்றையும் விட முக்கியமானது காதல் என நினைக்கும் நபராக இருப்பீர்கள்.
|
துலாம் ராசி
| - எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் காதலில் தீவிரமாக இருப்பீர்கள். உங்களின் அன்பை மற்றவர்கள் புறகணித்தால் உங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக காதலில் எப்போதும் அதிக நாட்டத்தை கொண்டவராக இருப்பீர்கள்.
|
விருச்சிகம் ராசி
| - விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பாதுகாப்பு உணர்வு வந்தால் மாத்திரமே காதலிப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் கூர்மையான உள்ளுணர்வு இருக்கும். இதனால் பிரச்சினைகள் வரும் முன்னர் அதிலிருந்து தப்பிக் கொள்வார்கள். தன்னிச்சையாக காதலில் முடிவெடுப்பார்கள்.
|
தனுசு ராசி
| - சிந்திக்கும் ஆற்றல் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். எப்போதும் உங்கள் வாழ்க்கை குறித்து மாத்திரம் யோசிக்கும் நபராக இருப்பீர்கள். தூரத்தை நினைத்து கவலைப்படும் நபராக இருப்பீர்கள். வாழ்க்கையில் எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பீர்கள்.
|
மகரம் ராசி
| - பாசத்தை அடிக்கடி வெளியில் காட்டும் நபராக இருப்பீர்கள் எப்போதும் அன்புடன் நடந்து கொள்ள விரும்புவீர்கள். உங்கள் துணையும் உங்களிடம் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நபராக இருப்பீர்கள். சில சமயங்களில் காதல் வாழ்க்கையில் சந்தேகங்கள் கூட வரலாம்.
|
கும்பம் ராசி
| - ஒருவர் எடுக்கக்கூடிய முடிவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். காதலர்களிடம் இருக்கக் கூடிய பிரச்சினைகள் அனைத்தும் உங்களிடம் இருக்கும். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனம் உங்களிடம் இருக்காது. இதனால் காதல் வாழ்க்கையில் பிரச்சினைகள் கூட வரலாம்.
|
மீனம் ராசி
| - காதல் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் இருப்பீர்கள். உங்களின் நினைவுகளை அவர்கள் சுமக்க வேண்டும் என நினைப்பீர்கள். காதல் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்று கோருகிறது.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).