முத்தம் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே அன்பை வெளிப்படுத்தும் எளிமையான வழி என்னவென்றால் அது முத்தம் தான். குறிப்பாக காதலை பொருத்தவரையில் முத்தம் மிகமுக்கிய இடம் வகிக்கின்றது.
வார்தைகளால் விவரிக்க முடியாத அன்பைக் கூட உங்களின் ஒரு முத்தம் இலகுவில் உணர்த்திவிடும். ஒரு நல்ல முத்தம் எப்பொழுதும் காதலர்களின் மனதில் நீங்காத நினைவாக பதிந்துவிடுகின்றது என உளவியல் சான்றுகளும் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் முத்தம் கொடுப்பதை கலையாகவே வைத்திருக்கின்றனர் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அப்படி முத்தம் கொடுப்பதில் கைத்தேர்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இல்லாவிட்டாலும், ஒருவரை விரும்பும்போது அவர்களிடம் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்குவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்த இவர்கள் கையிலெடுப்பது முத்தத்தைதான்.
இவர்களுடனான முத்தம் முடிவடையக் கூடாது என்று எண்ணுமளவிற்கு இவர்கள் முத்தம் கொடுப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே பாசக்காரர்கள் மற்றும் அவர்களின் முத்த நுட்பம் வேறுபட்டதல்ல. நம்பிக்கையுடன் முத்தம் கொடுப்பதோடு தன்மீது நம்பிக்கை வரும்படியும் முத்தம் கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள்.
மேஷம்
இவர்கள் சுவாரஸ்யமான முத்த நிபுணர்கள். அவர்களின் ராசியின் ஆளுமைக்கு ஏற்றாற்போல், மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலுடன் சாகசமாகவும் தைரியமாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் ஒரு மந்திர மற்றும் மறக்கமுடியாத முத்தத்திற்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் முத்தம் கொடுப்பதை ஒரு கலையாகவே பார்க்கின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |