இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்பர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே ஒரு சிறந்த நண்பன் நமக்கு பக்கபலமாக இருக்கும் போது ஆயிரம் எதிரிகளையும் தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இயல்பாகவே உருவாகும். நட்புக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணவியல்புகளை தீர்மாணிப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே சிறந்த நண்பருக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களை கொண்டிருப்பார்கள்.அப்படி சிறந்த நட்புக்கு உதாரணமாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இன்பத்தைத் தேடும் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள், நிலைத்தன்மை, விசுவாசம் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளில் ஆறுதலைக் காண்கிறார்கள்.
இவர்கள் இயல்பாகவே நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவரை்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டால், உயிரை கொடுத்தாவது வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இந்த ராசியினரை நண்பனாக பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்பகளை நம்பி நடுக்கடலிலும் தைரியமாக இறங்கலாம். உயிரை விடவும் இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மேஷம்
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், ஆர்வம், சாகசம் மற்றும் புதிய அனுபவங்களைத் தொடங்குவதில் சிறந்து விளங்குவார்கள்.
நட்பைப் பொறுத்தவரை, இந்த நெருப்பு ராசிக்காரர்கள் தங்கள் உற்சாகத்தைத் தூண்டி, தங்கள் தன்னிச்சையான மனப்பான்மையையும், சிலிர்ப்பைத் தேடும் இயல்பையும் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒருவரிடமிருந்து பயனடைவார்கள்.
இவர்கள் மற்ற எல்லா உறவுகளையும் விடவும் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கையை கூட நண்பனுக்காக தியாகம் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், புதன் கிரகத்தால் ஆளப்படுவதால், ஆர்வம், புத்திசாலித்தனம் மற்றும் அறிவுசார் தூண்டுதலில் செழித்து வளர்கிறார்கள்.
இந்த வான் ராசிக்காரர்கள், தங்கள் வேகமான வாழ்க்கை முறை மற்றும் நிலையற்ற ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடியவர்களுடன் நட்பை வளர்க்க விரும்புகிறார்கள்.
இவர்களின் நட்பு மிகவும் உறுதியானதாகவும் விசுவாசம் நிறைந்ததாகவும் இருக்கும். இவர்கள் ஒருவருடன் நட்பாக பழகிவிட்டால், எந்த நிலையிலும் இவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த ராசியினரை நண்கனாக பெற தவம் செய்திருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |