அம்மாவுக்காக உயிரையும் கொடுக்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமே தன் தாயின் மீது பாசம் இருக்கும்.
ஆனால் அம்மாவுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்களா என்று கேட்டால் நிச்சயம் கேள்விகுறி தான். இப்படிப்பட்டவர்களை பார்ப்பது மிக மிக அரிது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தன் தாய்க்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார்களாம் அப்படிப்பட்ட உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் உணர்ச்சிகள் மற்றும் குடும்ப பிணைப்புகளுடன் ஆழமாக இணைப்பை கொண்டிருப்பார்கள்.
குறிப்பாக இவர்களுக்கு அம்மா என்றால் உயிராக இருக்கும். தன் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை கவனித்துக் கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இவர்கள் தாயை மகிழ்விப்பதை தங்களின் தலையாய கடமையாக நினைக்கின்றார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் கருணை உள்ளத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவர்களின் அன்பு செயல்கள் மூலம் வெளிப்படுகிறது.
இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். தங்களின் தாய் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள் ஆனால் அதனை வார்த்தைகளால் சொல்லவே மாட்டார்கள்.
இந்த ராசியினர் ஒரு தாயாக சிறந்தவர்களாக இருக்கும் அதே நேரம், ஒரு மகளாகவும் தங்களின் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்த்தியையும் முழுமையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராகிவிடுவார்கள். இவர்களுக்கு மற்றவர்களை விட தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும்.
தாய்க்காக மனைவியிடம் கூட சண்டையிட தயாராக இருக்கும் இவர்கள் தங்களுக்கு உயிரை கொடுத்த அம்மாவிற்காக உயிரை இழந்தாலும் மகிழ்ச்சி என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |