மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட குணம் ஆகியவற்றில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய சகல குணங்களையும் கொண்டவர்களாகவும் கணவனின் மீது பக்தியுடையவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி மனைவி என்ற உறவுக்கு பக்காவாக பொருந்தும் குணங்களை கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள் இயல்பாகவே மிகுந்த பொருமை கொண்டவர்களாகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கடக ராசி பெண்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
குறிப்பாக கணவனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
மனைவிகளாக, இந்த ராசி பெண்கள் அதிக அரவணைப்பு, அக்கறை மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
ரிஷபம்

காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள், இயல்பிலேயே நேர்மைக்கும் உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் உறவுகளின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மதிக்கிறார்கள், இது அவர்களை நம்பகமான மற்றும் அர்ப்பணிப்புள்ள மனைவியாக பிரதிபலிக்கின்றது.
இந்த ராசி பெண்கள் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
கணவனின் மகிழ்சிக்காக தங்களை வருத்திக்கொள்ளவும் தயாராக இருப்பார்கள். இவர்களின் காதல் மிகவும் உண்மையுள்ளதாகவும் சுயநலம் அற்றதாகவும் இருக்கும்.
கன்னி

கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனால் ஆளப்படும் கன்னி ராசி பெண்கள், உறவுகள் விடயத்தில் மிகவும் சகிப்பு தன்மை கொண்டவர்களாகவும் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் ஒரு வாழ்க்கைத் துணையாக தங்கள் உறவில் பொறுப்புணர்வு கொண்டவர்களாகவும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அனைத்து உறவுகளையும் சரியாக கையாளுவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனைவியான ஒரு போதும் தங்களின் கடமைகளில் இருந்து விலகுவது கிடையாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        