இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்...
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு அமையவே அவர்களின் வாழ்வில் கிரகங்களின் ஆதிக்கம் மற்றும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள்களின் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் முழுமையதான ஆசீர்வாதம் இருக்கும்.
அப்படி சிவனின் விருப்பத்துக்குரியவர்களாக அவரின் துணையுடன் வாழும் நட்சத்திரங்கள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானின் முழுமையான அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவரை்கள் சிவனின் விருப்த்துக்குரிய ஆன்மாக்களைாக கருதப்படுகின்றார்கள்.இந்த நட்சத்திரத்தினர் வாழ்வில் எல்லா சந்தர்ப்பங்களிலும் சிவனின் துணை நிச்சயம் இருக்கும்.
அவர்களின் அனைத்து முயற்சிகளும் சிவனின் ஆசியால், வெற்றியடையும். இவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணக்கஷ்டத்தை அனுபவிக்கவே மாட்டார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருப்பார்கள்.
பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னலமற்ற அன்பை கொண்டவர்களாக இருப்பதால், சிவனின் அன்புக்குரியாவர்களாக இருப்பார்கள்.
சிவபெருமானைப் போலவே இவர்களின் ஞானம் அபரிமிதமானதாக இருக்கும். இவர்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவர்களாக இருப்பதால் சிவனின் அன்பும் ஆசியும் இவர்களுக்கு முழுமையாக இருக்கும்.
இவர்களின் வாழ்ககையில் அனைத்து சூழ்நிலைகளிலும் சிவனின் துணை நிச்சயம் இருக்கும். இவர்கள் விழும் முன்னரே சிவனின் கரம் அவர்களை தாங்கிக்கொள்ளும்.
விசாகம்
சிவபெருமானைப் போலவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லைகளுக்கு கட்டுப்பமாதவர்களாகவும் ஆழ்ந்த கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் உள்ளார்ந்த குணங்கள் சிவபெருமானின் ஆற்றல்களுடன் ஒத்துப்போகும் தன்மையில் இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் சிவனின் துணையிருக்கும்.
இவர்களுக்கு ஆன்மீக உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதல் இருக்கும். இவர்கள் சிவனின் நிழலில் இருப்பார்கள். இவர்களை தோற்கடிப்பது அசாத்தியமானதாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |