இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவருக்கு என தனித்துவமான குணங்கள் இருக்கும்.
அப்படியாயின், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயது முதல் பயம் அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே துணிச்சல் இருக்கும். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை அவர்களே சரிச் செய்து கொள்வார்கள்.
பெரும்பாலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எந்தவொரு புதிய விஷயத்தையும் துணிச்சலாக செய்பவர்கள் அச்சமற்ற மனப்பான்மை, தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்கும்.
அந்த வகையில், தொழில், உறவுகள் அல்லது தனிப்பட்ட நோக்கங்களில் அனைத்திலும் அவர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரணி | பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே பயம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பின்னால் வரும் பிரச்சினைகளை கண்டு துளியளவும் கவலை இருக்காது. மாறாக புதிய பயணத்தை நோக்கி சென்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள துண்டுதலாக இருக்கும். |
மகம் | மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ஆபத்துக்களுக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சவால் விடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள். மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை விட இவர்கள் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். தைரியம் இருப்பதால் அவர்கள் காவல் துறையில் சாதிக்க வாய்ப்பு உள்ளது. |
பூராடம் | பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாகசங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தனித்து நின்று போராடும் நபராக இருப்பார்கள். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை எதிர்த்து நின்று போராடும் குணம் இருப்பதால் ஆபத்து நெருங்காது. அறியப்படாத பிரதேசங்களை ஆராயும் ஆளுமை உங்களிடம் இருக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).