இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பிரலமாவது உறுதி! நீங்க எந்த மாதம்?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்துவதை போல் அவர்களின் பிறப்பு மாதமும் நேடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் அனைவராலும் அறியப்படும் பிரபலமாக மாறுவார்களாம். அவை எந்தெந்த மாதங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எந்த கடினமான சூழ்நிலையையும் முகத்தில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சிறுபராயம் மிகவும் சோகமும், வலிகளும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்களாக மாறிவிடுவார்கள்.
எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் போராடும் குணத்தை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நெகிழ்வு தன்மை இவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும்.

தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் எந்த சூழ்நிலையிலும், கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் ஆழ்மன ஆசையை நிறைவேற்றும் வரையில் அயராது உழைக்கும் குணம் இவர்களிடம் இருப்பதால், இவர்களின் எதிர்காலம் புகழின் உச்சத்தில் இவர்களை அமரச்செய்கின்றது.
டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது கிடையாது. இவர்களை போல் யாராலும் சூழ்நிலைக்கு இயைந்து நடக்க முடியாது.
தனித்துவமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இவர்கள் எதிர்காலம் குறித்த தெளிவான திட்டங்களை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள். இவர்களின் இந்த ஆளுமைகள் இவர்களின் பிரபலத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |