நினைத்த காரியங்கள் நினைத்த படி நடக்க வேண்டுமா? இதை மட்டும் செய்து பாருங்க
பொதுவாகவே அனைவரும் தங்களின் பிரதத்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் இறைவனிடம் வழிப்படுகின்றார்கள்.
இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இயற்கையாகவே நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அதற்கு அறிவியல் ஆதாரங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் இறைவழிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி பிராத்தனைகளின் சக்தியை அதிகரிக்க வழிப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய இலைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்து மத வழிப்பாடுகளில் சில குறிப்பிட்ட மரங்கள் மற்றும் கொடிகளின் இலைகளை பயன்படுத்துவதை பாத்திருப்போம். அதற்கு அவற்றின் புனித தன்மை மற்றும் நேர்மறை ஆற்றல்ககளை ஈரை்க்கும் திறன் தான் காரணம்.
வாழை இலை
இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் சாஸ்திரங்களின் பிரகாரம் வாழை மரம் விஷ்ணுவுடன் இணைப்பை கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
அதனால் விஷ்ணு வழிபாட்டில் வாழை இலைகளை அதிகம் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதில் பிரசாதம் வைத்து இறைவனை வழிப்படும் பொது நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையில் முதிர்ச்சியடைந்த வாழை மரத்தை வழிபட்டால் குருபகவானின் ஆசி கிடைக்கும் என்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
வெற்றிலை
தொன்று தொட்டு வெற்றிலை வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால்தான் இது மிகவும் புனித தன்மை வாய்ந்த இலையாக மக்கள் மத்தியில் அறியப்படுகின்றது.
வெற்றிலை பூஜைக்கு மட்டுமின்றி ஜோதிட பரிகாரங்களின் போதும் கூட அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. வெற்றிலைக்கு தீய சக்திகளை அகற்றும் தன்மை இயற்கையாகவே காணப்படுகின்றது.
ஜோதிட கண்ணோட்டத்தில் வெற்றிலை புதன் கிரகத்துடன் தொடர்பை கொண்டுள்ளதால், புதன் கிரகத்தின் ஆசியை பெற வழிப்பாட்டில் வெற்றிலையை பயன்படுத்துவது அவசியம்.
ஞானகாரகன் என வர்ணிக்கப்படும் புதன் பனவான் அறிவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையின் அதிபதியாக திகழ்கின்றார். வெற்றிலை கொண்டு இறைவனை வழிபடுவதால் எண்ணம் தெளிவடையும் என்பது நம்பிக்கை.
துளசி இலை
துளசி இலைகள் பெரும்பாலும் எல்லா பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. துளசி இலைகள் விஷ்ணு வழிபாட்டிலும் செல்வ செழிப்பை வழங்கும் லட்சுமி தேவியின் வழிபாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வழிபாடுகளில் இந்த இலைகளை சேர்த்துக்கொண்டால், அனைத்து துன்பங்களும் நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது.
மா இலை
இந்து மதத்தில் எல்லா சுப காரியங்களிலும் வீட்டின் பிரதான வாசலில் மா இலை தோரணம் கட்டப்படுவது வழக்கம். மாவிலைகளுக்கு நேர்மறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அதிகம்.
அதில் பிராண வாயு அதிகம் இருப்பதும் மாவிலை தோரணம் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும். இது சனநெரிசல் நிறைந்த இடங்களிலும் சுவாச புத்துணர்வை கொடுக்கக்கூடியது.
மத நம்பிக்கைகளின் படி மாவிலையை பூஜைகளில் பயன்படுத்துவது உங்கள் வேண்டுதல்கள் எண்ணம் போல் நிறைவேறுவதற்கு வழிவகுக்கும்.
வில்வ இலை
வில்வ மரம் மற்றும் அதன் இலைகள் கடவுள்களின் கடவுளாக திகழும் ஆதியோகி சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
வில்வ இலைகளுக்கு சாஸ்திரங்களின் பிரகாரம் தனித்துவமான சிறப்புகள் காணப்படுகின்றது. இந்த இலைகளை வழிபாட்டில் பயன்படுத்துவது பிராத்தனையின் வலிமையை மேலும் அதிகரிக்கும்.
chanakya topic: இந்த பழக்கங்கள் செல்வத்தை அழித்து வறுமையில் தள்ளும்... உங்களிடம் இருந்தா மாத்திக்கோங்க
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |