வன்முறைக்குன்னே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, மற்றும் விசேட குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய வகையில் தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் ஆக்குரோஷமான குணம் கொண்டவர்களாகவும், சிறிய விடயத்துக்கும் உடனே வன்முறையில் இறங்கிவிடும் இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படி வன்முறைக்கு என்றே பிறப்பெடுத்தவர்கள் போல் திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் போரின் கிரகமும் மற்றும் கிரகங்களின் தளபதியுமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், இயல்பாகவே மிகவும் கோப உணர்வு கொண்டவர்களாகவும், வன்முறைக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் குணம் நிச்சயம் இருக்கும். இவர்கள் மற்றவர்களால் அவமதிக்கப்படுவதாக உணரும்போது எரிமலை போல வெடிப்பார்கள். இவர்களின் கோபத்தை எளிதில் யாராலும் கட்டுப்படுத்திவிட முடியாது.
இந்த ராசியினர் கம்பீரமான உடல் தோற்றமும் மற்றவர்களை வசீகரிக்கும் ஆன்மையையும் வசீகர முகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்களும் போர் செய்ய தயங்காதவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே உணர்வுரீதியாக ஆக்ரோஷமானவர்களாக இருப்பார்கள். இவர்களை ஒருபோதும் மற்றவர்களால் கணித்துவிட முடியாது.
ஆனால் இவர்கள் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள், இருப்பினும் இவர்களிடம் ஆக்ரோஷமும் பழிவாங்கும் தன்மையும் மிகவும் ரகசியமாக வைத்திருந்து சமயம் பார்த்து பழிதீர்ப்பார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள், இவர்கள் நெருப்பு ராசியினர் என்பதால், இவர்களிடம் கோபம் மற்றும் வன்முறை எண்ணம் சற்று அதிகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வெற்றியின் மீது தீ்ராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபத்தை இயர்களாலேயே கட்டுப்படுத்டதிக்கொள்ள முடியாது.
இந்த ராசியினருக்கு ஈகோ மற்ற அனைத்து ராசிக்காரர்களையும் விட மிகவும் அதிகமாக இருக்கும். இவர்கள் சற்றும் சிந்திக்காமல் வன்மறையில் இறங்கிவிடும் குணம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் போருக்கு தயார் நிலையில் இருப்பார்கள்.
இவர்களிடம் தன்னம்பிக்கை சற்று அதிகமாக இருக்கும் அதே சமயம் தற்பெருமை மிக்கவர்கள், மற்றவர்கள் தங்களை சிறுமைப்படுத்தப்படுவதையோ அல்லது அவமதிக்கப்படுவதையோ ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அப்படி நேரும் பட்சத்தில் மிகவும் மோசமானவர்களாக மாறிவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |