தவறி கூட இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடாதிங்க... ஆபத்து உறுதி!
தற்காலத்தை பொருத்தவரையில் அனைவருமே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் உழைப்பதற்கு அடிப்படை காரணமே உணவு தான் என்பதை பல சந்தர்ப்பங்களில் மறந்துவிடுகின்றோம்.
அன்றாட வேலை பளு காரணமாக பலரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பழைய உணவுகளையே மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவம் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
அப்படி நாம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பல உணவுகள் விஷமாக மாறும் தன்மையை கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், மீதமுள்ள உணவுகளை மீண்டும் சூடாக்குவது என்று வரும்போது, சில சமைத்த உணவுகள், குறிப்பாக சரியாக சேமிக்கப்படாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்டால், உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பொதுவான உணவுகளை இரண்டாவது முறையாக மீண்டும் சூடாக்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஏன் ஆரோக்கியமற்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீண்டும் சூடாக்கவே கூடாத உணவுகள்
சோறு
வேகவைக்கப்படாத அரிசியில் பேசிலஸ் செரியஸின் வித்துகள் இருக்கலாம். அரிசியை சமைத்து அறை வெப்பநிலையில் விடும்போது, இந்த வித்துகள் பெருகும். அதனை மீண்டும் சூடுபடுத்துவதால் இந்த பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள் நீங்காமல் போகலாம், இதனால் உணவு விஷமாக மாறும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் பல செரிமான சிக்கல்களையும் தோற்றுவிக்கலாம்.
கோழி இறைச்சி
மீண்டும் சூடுபடுத்தும் போது கோழி இறைச்சியில் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இந்த தவறை அதிகம் பேர் செய்கிறார்கள். இதை செய்து சிலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூறிய பிறகும் மக்கள் இதை செய்வதை நிறுத்தவில்லை.
சிக்கனை மறுநாள் சாப்பிடுவதே தவறு. இதிலும்“ அதை பிரீட்ஜில் வைத்து அதன் தன்மை மாறிய பிறகு மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவது செய்யவே கூடாத தவறு.கோழியை மீண்டும் சூடுபடுத்தும்போது, மீதமுள்ள பாக்டீரியாக்களை அகற்ற 165°F (74°C) உள் வெப்பநிலையை அடைவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
முட்டைகள்
முட்டைகளை, குறிப்பாக வேகவைத்த முட்டைகளை மீண்டும் சூடுபடுத்துவது, கந்தக சேர்மங்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கும், இதன் விளைவாக விரும்பத்தகாத வாசனை ஏற்படும்.
கூடுதலாக, முட்டைகளை மீண்டும் சூடுபடுத்துவது அமைப்பு மற்றும் சுவையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதை மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம் அது விஷமாக மாறும் என கூறப்படுகிறது.
உருளைக்கிழங்கு
மீண்டும் சூடுபடுத்தும்போது, உருளைக்கிழங்கானது அவற்றின் ஸ்டார்ச் அமைப்பை மாற்றி, சோலனைன் எனப்படும் நச்சு சேர்மங்கள் உருவாக ஆரம்பிக்கும்.
சோலனைன் கசப்பானது மற்றும் குமட்டல், வாந்தி மற்றும் பிற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை சமைத்த உடனேயே சாப்பிடுவது தான் சிறந்தது.
காளான்
காளான்களை மீண்டும் சூடுபடுத்துவது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் அவை பாக்டீரியா மாசுபாட்டிற்கு ஆளாகின்றன.
காளான்களில் அதிக புரதச் சத்து காணப்படுகின்றது. அதனை மீண்டும் சூடுபடுத்துவது பாக்டீரியாக்களை அகற்றாது, இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
எண்ணெய்
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை சேமித்து வைத்து மீண்டும் வேறு ஒரு உணவிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இது முற்றிலும் தவறான விடயம், எண்ணெய்யில் ஒமேகா 3 ஃபேட்டிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், அதை மீண்டும் மீண்டும் சூடாக்கி உபயோகப்படுத்துவது உடல் நலத்திற்கு பாதக விளைவை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
