எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த திசையில் அமர்ந்து சாப்பிடாதீங்க
சாப்பிடும் போது எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உணவு
பொதுவாக ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமாக இருப்பது உணவு ஆகும். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சத்தான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.
அவ்வாறு நாம் சாப்பிடும் உணவை எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுகின்றோம் என்பதை முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஆன்மீகத்தில் இவை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. உணவு சாப்பிடுவதற்கு என சில வரைமுறைகளும் உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த திசையில் சாப்பிட வேண்டும்? நாம் சாப்பிட்ட இலையை எவ்வாறு மூட வேண்டும் என்று அனைத்திலும் சாஸ்திர முறைகள் உள்ளது.

எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது?
இலையில் சாப்பாடு பரிமாற ஆரம்பித்தால் முதலில் காய்கறி, அப்பளம் இவற்றனை வைத்த பின்பு தான் சாதத்தை பரிமாற வேண்டும்.
முதலாவதாக சாதத்தை கொண்டு வைப்பதோ, வத்தல், கீரை வைப்பதோ கூடவே கூடாது.
சாஸ்திரத்தின் படி கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். அதுவே மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் பொருள் சேரும் என்று கூறப்படுகிறது.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் புகழ் வளரும். ஆனால் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய்கள் வரும். இதனால் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எப்பொழுது சாப்பிடலாம்?
பசி எடுத்தால் மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பசி இல்லாமல் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது இவற்றினால் நோய்கள் ஏற்படும்.
அதே போன்று சாப்பிடும் முன்பு கை, கால், வாய் கழுவிவிட்ட பின்பு தான் சாப்பிடுவதற்கு அமர வேண்டும்.
சாப்பாடு முன்பு அமர்ந்துவிட்டால் முழுகவனமும் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். டிவி, போன் பார்ப்பது, மற்ற வேலையில் கவனம் செலுத்திக் கொண்டு சாப்பிடுவது கூடாது. ஏனெனில் இவை தரித்திரத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகின்றது.

வீட்டின் கதவு சாப்பிடும் போது மூடி வைத்திருக்க வேண்டும். கதவை திறந்து வைத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
சூரிய உதயம், அஸ்தமனம் இவற்றின் போது சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலே கூறப்பட்டுள்ள முறையில் சாப்பிடுவதால் நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், செல்வ செழிப்புடனும் வாழ முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |