தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இந்த நாட்களில் தவற வீடாதீங்க- பலன் நிச்சயம்
பொதுவாக இந்தியர்களின் கலாச்சாரங்களின் படி தங்கம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
தங்கத்துடன் பல்வேறு வகையான உலோகத்தைக் கலந்து ஆபரணங்கள் செய்கின்றார்கள். இதனை வாங்கி அணிந்தால் தான் பெண்களுக்கே அழகு என நம்புகிறார்கள்.
இன்னும் சிலர் தங்கத்தை ஒரு சொத்தாக கருதுகின்றனர். மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது என அவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் இந்திய போன்ற நாடுகளில் தங்க நகைகள் அதிகமாக விற்பனையாகின்றன.
இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருக்கும் தங்கத்தை எந்த நாட்களில் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி, வாரத்தில் நான்கு நாட்கள் தங்கம் வாங்கலாம். இப்படி செய்தால் மாத்திரமே தங்க வரவு வீட்டில் அதிகரிக்கும்.
அந்த வகையில் தங்கம் வாங்க ஏற்ற நாட்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
தங்கம் வாங்க ஏற்ற நாட்கள்
1. பூசம் நட்சத்திரம் நாட்களில் தங்கம் வாங்கலாம். இந்த நாள் பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்து அதிலிருந்து 8வது நாள் வரும். இந்த நாட்கள் புனித நாட்களாக பார்க்கப்படுகின்றது. புஷ்ய நட்சத்திரம் வரும் நாள் வியாழக்கிழமை என்றால் அன்றைய நாளை “குரு புஷ்ய அமிர்த யோகம்” என அழைப்பார்கள்.
2. மகர சங்கராந்தி தினம் இந்தியா போன்ற நாடுகளில் பெறு நாளாகவே கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் ஜனவரி 14 அன்று வரும். அறுவடை பருவம் தொடங்கும் நாளான அன்று தங்கம் வாங்கலாம். இந்த நாட்களில் நகை வாங்குபவர்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்.
3. இந்து புத்தாண்டு தினத்தில் தங்கம் வாங்கலாம். இந்த தினத்தை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் உகாதி என்றும், மகாராஷ்டிராவில் குடி பட்வா என்றும் அழைப்பார்கள். அதே சமயம் பஞ்சாபில் பைசாகி என்றும், கேரளாவில் ஓணம் என்றும் அழைப்பார்கள். இந்த நாள் மக்களின் செழிப்பான வருங்காலம் ஆரம்பிக்கின்றது. இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
4. இந்து நாட்காட்டியின்படி, அக்ஷய திருதியை விசாக மாதத்தில் வரும் நாளாகும். இந்த நாட்களில் வழமையாகவே தங்கம் வாங்குவார்கள். ஏனென்றால் இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் வீட்டிலுள்ள செல்வம் அதிகரிக்கும் என்பார்கள்.
5. நவராத்திரி என்பது துர்கா தேவியை வழிபடும் 9 ஆவது நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாட்களில் திருமண விழாக்களுக்காக இந்தியர்கள் தங்கம் வாங்குகிறார்கள். அத்துடன் இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |