Numerology: இந்த தேதியில் பிறந்த பொண்ண கல்யாணம் பண்ணுங்க.. காதலிப்பதில் கில்லாடிகள்
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள் கணவரை உருகி உருகி காதலிப்பார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எந்தெந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 4-ல் பிறந்தவர்கள்
எண் கணிதத்தின் படி, 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் ராகுவுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையையும் தாண்டி காதலிக்க தெரியும். 4 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவார்களாம்.
இவர்களிடம் இருக்கும் இந்த கோபம் சில சமயங்களில் அளவுக்கு அதிகமான பிரச்சினைகளை உண்டு பண்ணும். அத்துடன் சில சமயங்களில் சிறிய விடயங்களுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படச் செய்யும். ஆனால் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள்.
இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அவருடைய துணையை உருகி உருகி காதலிப்பார்களாம். அவர்கள் தன்னுடைய துணை தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்ய தயங்க மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணை ஏமாற்றினால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
பிரிந்து போகவும் தயங்கமாட்டார்கள். இந்த பெண்கள் ரொம்பவே கடின உழைப்பாளிகளாக இருந்து வாழ்க்கையின் வெற்றியாளர்களாக இருப்பார்கள். மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இவர்களை பார்ப்பதற்கு சிலர் தயக்கம் கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).