உலகிலுள்ள பணக்காரர்கள் செட்டிலாக போட்டிப்போடும் நாடு எது தெரியுமா? இந்தியர்களின் ஆசையாம்
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் வணிகம், வேலை வாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் இந்தியாவை விட்ட வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது புதிய பழக்கம் ஒன்று உருவாகியுள்ளது.
அதாவது இந்தியாவில் பணம் சம்பாரித்துக் கொண்டு வெளிநாடுகளில் செட்டலாகி விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தியர்களின் விருப்பமான நாடுகளில், தெற்கு ஐரோப்பிய நாடான மால்டா முக்கிய இடமாக மாறி வருகிறது.
சில பாலிவுட் பிரபலங்கள் உட்பட இந்திய பணக்காரர்கள், மால்டாவை ஐரோப்பிய குடியுரிமைக்கான பிரதான நுழைவாயிலாக பார்க்கிறார்கள்.
ஊடக அறிக்கைகளின்படி, பல பாலிவுட் நட்சத்திரங்கள் தொழில்முறை வளர்ச்சி மற்றும் வரி சலுகைகளுக்காக மால்டிஸ் குடியுரிமையை வாங்கிக் கொள்கிறார்கள்.
மால்டாவில் பிரம்மிப்பூட்டும் நிலப்பரப்புகள் மற்றும் சுற்றுலா இடங்கள் உள்ளன. இது இந்தியர்களுக்கு பிடித்திருப்பதால் அங்கு குடியுரிமை வாங்கிச் செட்டிலாகுகிறார்கள்.
அந்த வகையில், அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் மால்டாவுக்கு குடிபெயர என்ன காரணம்? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மால்டாவின் குடியுரிமைத் திட்டம்
மால்டா முதலீடுகளின் மூலம் குடியுரிமை திட்டத்தை வழங்குவதால் பணக்காரர்கள் அங்கு சென்று செட்டிலாக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக Maltese Exceptional Investor Naturalization (MEIN) அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய (EU) குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ பாதையாக இருப்பதால் பிரபலங்கள் உட்பட பலர் அவர்களிடம் உள்ள சொத்துக்களை மால்டாவின் பொருளாதாரத்திற்கு உதவியாக கொடுக்கிறார்கள்.
நன்மைகள்
1. மால்டா குடியுரிமையைப் பெறும் நபர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (EU) எங்கு வேண்டும் என்றாலும் வாழலாம். அதே சமயம், வேலை மற்றும் படிப்பு விரைவில் கிடைக்கும். 12 முதல் 36 மாதங்களுக்குள் குடியுரிமை வழங்கப்படலாம். அத்துடன் மால்டா முதலீட்டாளர்கள் நாட்டில் நிரந்தரமாக வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
2. மால்டா நாட்டின் பாஸ்போர்ட்டின் வலிமைமிக்கது. அமெரிக்கா, கனடா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் செய்யலாம். வணிக வாய்ப்புகளுக்கு இது உதவியாக இருக்கும்.
3. முதலீட்டு மூலம் குடியுரிமை திட்டத்தின் கீழ், மால்டாவின் விண்ணப்பதாரர்கள் அரசாங்க பங்களிப்பை கூட வழங்கலாம். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து லாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
4. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புள்ள நபர்களை ஈர்க்கும் வாலெட்டா, ஸ்லீமா மற்றும் செயிண்ட் ஜூலியன்ஸ் போன்ற பிரபலமான இடங்களில் ஆடம்பர சொத்துக்கள் கிடைக்கும்.
5. மால்டாவின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு வணிக முதலீடுகளுக்கு சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பல முதலீட்டாளர்கள் ஐரோப்பிய குடியுரிமை பெறுவதுடன் அவர்களின் செல்வத்தையும் அதிகரித்து கொள்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |