No Airport, No Local Currency: ஆனால் உலகின் பணக்கார நாடு.. கோடிகளில் புரளும் மக்கள்
ஒரு நாட்டின் வெற்றிக்கு அந்த நாட்டின் இராணுவ வலிமை மற்றும் பிராந்திய விரிவாக்கம் மிக முக்கியம்.
இதனை அடிப்படையாக வைத்தே பல நாடுகள் பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறிய நாடான Liechtenstein முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளது. இந்த நாட்டில் வளங்கள் குறைவாக இருந்த போதிலும் அந்த நாட்டின் தனி வருமானம் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.
உலகின் மிக நிலையான பணக்கார நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த நாட்டின் சொந்த நாணயத்தை அச்சிடவில்லை. அதே போன்று சர்வதேச விமான நிலையம் இல்லாத ஒரு நாடாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தனிநபர் வருமானம் உலகிலேயே மிக உயர்வாக இருப்பது தான் Liechtensteinன் வெற்றியின் ரகசியமாக பார்க்கிறார்கள். இந்த பூமியில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் சின்னங்கள், நாணயம், மொழி, தேசிய விமான நிலையங்கள், நாட்டின் வளங்கள் ஆகியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறது.
Liechtenstein இவற்றிற்கு எதிர் பாதையில் செல்கிறது. தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்காமல் அண்டை நாடான சுவிட்சர்லாந்தை சார்ந்து வாழ்கின்றது.
உதாரணமாக தனக்கென ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொள்ளாமல் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவின் போக்குவரத்து வலையமைப்புகளைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான டாலர்களை சேமித்து வைத்திருக்கிறது.

தனி நபர் வருமானம்
Liechtensteinனை சேர்ந்த மக்கள் தொழில் மற்றும் புதுமைகளில் அதிகமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ-டிரில்கள் முதல் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் அளவுக்கு இங்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது.
கட்டுமான உபகரணகள் உற்பத்தி Liechtensteinன் தொழில்துறை வலிமையின் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதால் மக்கள் தொகையை விட நிறுவனங்கள் அதிகமான உள்ளன.

இதன் காரணமாக வேலையின்மை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது, மேலும் குடிமக்களின் வருமானம் அதிகமாக இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |