இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ங்க... மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!
பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது போல், அவர்களின் பிறப்பு மாதமும் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் மிகுந்த பொறுப்புணர்வும், எதிர்காலம் பற்றிய அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி தனித்துவ குணங்கள் காரணமாக சிறந்த கணவனான மாறக்கூடிய ஆண்கள் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது குறித்த கணிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி

ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் குடுப்பம் மற்றும் உறவுகள் குறித்து அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
குறிப்பாக இந்த மாதத்தில் பிறந்த அண்கள் பொறுப்புணர்வில் முதலிடம் வகிக்கின்றார்கள். இவர்கள் ஒழுக்க மற்றும் தீவிரமான அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் வாழ்க்கை துணைக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆகஸ்ட்

ஜோதிடத்தில் குறிப்பிடப்படுட்டுள்ளதன் பிரகாரம், ஆகஸ்ட் மாசம் பிறந்தவர்கள் தீவிர பொறுப்புணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் செய்யும் எந்த விடயத்திலும் முழுமையும் நேர்த்தியும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பு கொண்டவர்களாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செய்ல்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் குடும்பத்திலும் சரி சமூகத்திலும் சரி ஒரு பொறுப்புணர்பு கொண்ட நபர்களாக திகழ்வார்கள். திருமண வாழ்க்கையிலும் ஒரு நம்பகமான துணையாக இருப்பார்களாம்.
நவம்பர்

ஜோதிடத்தின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் பொறுப்புணர்வுக்கும், நம்பக தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
இந்த மாத்தில் பிறந்தவர்கள் உறவுகளுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் சீராக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். திருமண பந்தத்தின் மீது இவர்களுக்கு தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |