viral video: பறவைகளின் இந்த பழக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இயற்கையின் விந்தை
பறவைகள் நீண்ட தூரம் தொடர்ச்சியாக பறந்து பின்னர் ஓய்வெடுக்கும் சந்தர்பத்தில் அவை அவ்வாறு ஓய்வெடுக்கும் என்பதை காட்டும் அரிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இயற்கையில் பல விடயங்கள் மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. அந்த வகையில் சில பறவைகள் வாரக்கணக்கில், மாதக்கில் மட்டுமன்றி கண்டங்களை தாண்டும் பறவைகள் வருடக்கணக்கில் கூட ஓய்வின்றி பறந்துக்கொண்டே இருக்கும்.
அவ்வாறு இடைவிடாமல் பறக்கும் பறவைகள் பறந்துக் கொண்டே இரண்டு வினாடிகளில் உறங்கும், ஒரு நிமிடத்திற்கு சில முறை இவ்வாறு செய்கின்றன அதனால் தான் இவற்றால் உறங்காமல் நீண்ட நாட்களுக்கு பறக்க முடிகின்றது என விலங்கியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் சில பறவை இனங்கள் திமிங்கலங்களைப் போல ஒரே நேரத்தில் மூளையில் பாதி தூங்குகின்றன. மூளையின் இடது பாதி அல்லது வலது பாதி தூங்கும் போது, அவை தன்னிச்சயாக பறந்து கொண்டே இருக்கும், பின்னர் அவை தூங்குவதை மறுபக்கத்திற்கு மாற்றிக்கொள்ளும்.
இப்படி இயற்கையில் எண்ணற்ற ஆச்சரியங்கள் மறைந்து கிடக்கின்றன. அப்படி நீண்ட தூரம் பறந்து செல்லும் ஒரு வகை பறவை இனம் கூட்டமாக தங்களின் வழக்கப்படி ஓய்வெடுக்கும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவருதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |